Breaking News

கருணா தமிழ் மக்களின் பிரச்சனைகளை திசை திருப்புகின்றார்- சுரேஸ் (காணொளி இணைப்பு)

தமிழீழ விடுதலை புலிகளின் முன்னாள் தளபதி கருணா தனது பேட்டி மூலம் தமிழ் மக்களின் பிரச்சனைகளை திசை திருப்பி வேறு பக்கம் கொண்டு செல்ல பார்ப்பதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இந்திய தொலைக்காட்சிகளுக்கு கருணா வழங்கிய செவ்வி தொடர்பாக யாழ்.ஊடகவியலாளர்களுடன் கருத்து பகிர்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் அவர் குறிப்பிடுகையில்\

கருணா தனது நேர்காணலில் தான் சமஷ்டி தீர்வுக்காக நீண்டகாலம் உழைத்ததாக கூறியுள்ளார். அவர் நாடாளுமன்றத்தில் இருந்த காலத்தில் நானும் நாடாளுமன்றத்தில் இருந்தவன் என்றவகையில் அவர் சமஷ்டி குறித்து பேசியதை ஒருபோதும் கண்டதில்லை.

ஆனால் இன்று பிரதி அமைச்சர் பதவியும் பறிபோய், தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியும் வழங்கப்படாத நிலையில் தான் சமஷ்டி மீது அவருக்கு காதல் வந்துள்ளது.இதே அவருக்கு தேசியப்பட்டியல் ஆசனம் வழங்கப்பட்டிருந்தால் அவர் பிரதி அமைச்சுப்பதவியை தேடி சென்றிருப்பார். அது வழங்கப்படத காரணத்தால் தான் அவர் தற்போது சமஸ்டி பற்றியெல்லாம் பேசி புதிதாக பிரச்சனைகளை ஏற்படுத்தப்பார்க்கிறார்

மேலும் தற்போதைய கலத்தில் எவ்வளவோ விடயங்கள் இருக்க இதுபோன்ற பேட்டிகள் தொடர்பில் நாம் அலட்டிக்கொள்ள தேவையில்லை என்றார்.