Breaking News

40 ஆயிரம் மக்களின் உயிரிழப்பைத் தவிர்த்திருக்க முடியும்-நவநீதம்பிள்ளை (காணொளி)

இந்தியா உரிய நேரத்தில் தலையிட்டிருந்தால் இலங்கையின் இறுதிக்கட்டப் போரில் 40 ஆயிரம் பொது மக்களின் உயிரிழப்பைத் தவிர்த்திருக்க முடியும் என்று ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் முன்னாள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் தந்தி தொலைக்காட்சி மற்றும் புதிய தலைமுறை தொலைக்காட்சி என்பவற்றுக்கு வழங்கிய விசேட செவ்வியின்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

விடுதலைப்புலிகள் வன்முறையினை தவிர்த்து போராட்டத்தை நகர்த்தியிருந்தால் தென்னாபிரிக்காவின் நெல்சன் மண்டேலா அவர்களைப்போல போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியிருக்கலாம் என்றும் தெரிவித்த நவநீதம்பிள்ளை தமிழக முதலமைச்சர் அவர்களின் தீர்மானத்தை வரவேற்று பாராட்டியதோடு தமிழக மக்கள் தங்கள் ஆதரவை இலங்கைத்தமிழ் மக்களுக்கு தொடர்ந்து வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தார். 

இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகள் சர்வதேச நீதிப் பொறிமுறைகைளைத் தொடர்ச்சியாக நிராகரித்து வருகின்றன. இந்தநிலையில், இலங்கை போர்க்குற்ற விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு எவ்வாறு இருக்கவேண்டும் என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.