Breaking News

ஐ.நா விசாரணை அறிக்கை – இலங்கைக்கு 5 நாட்கள் காலஅவகாசம்

இலங்கையில் போரின் போது இடம்பெற்ற மீறல்கள் குறித்து ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் நடத்திய விசாரணை அறிக்கை தொடர்பாக பதிலளிப்பதற்கு இலங்கை அரசாங்கத்துக்கு ஐந்து நாட்கள் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா விசாரணை அறிக்கை நேற்றிரவு இலங்கை அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டது. இதனை இலங்கை வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.இந்த அறிக்கைக்கு ஐந்து நாட்களுக்குள் எழுத்து மூலமான பதிலை அளிக்குமாறு இலங்கை அரசாங்கத்திடம், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம் கோரியுள்ளதாக, இலங்கை வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஐ.நாவின் விசாரணை அறிக்கையும், அந்த அறிக்கை தொடர்பான இலங்கையின் பதிலும், வரும் 30ஆம் நாள் ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வில் சமர்ப்பிக்கப்படவுள்ளன.