Breaking News

சர்வதேச விசாரணை கோரிய கையெழுத்து பிரதிகள் ஐ.நா.வுக்கு அனுப்பிவைக்கும் நடவடிக்கை ஆரம்பம்

கடந்த காலத்தில் நடத்­தப்­பட்ட இனப்­ப­டு­கொலை தொடர்­பாக சர்­வ­தேச விசா­ரணை நடத்­தப்­ப­ட­வேண்­டு­மெனக் கோரி சர்­வ­தேச பொறுப்­புக்­கூறல் போராட்­டத்தின் மூலப்­பி­ர­திகள் ஐக்­கிய நாடுகள் உயர் ஸ்தானி­க­ரா­ல­யங்­க­ளுக்கு அனுப்பும் நட­வ­டிக்கை ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ள­தாக தமிழர் செயற்­பாட்­டுக்­கு­ழுவின் தலைவர் பேரா­சி­ரியர் வி.பி. சிவ­நாதன் தெரி­வித்­துள்ளார்.

யாழ்ப்­பாணம் மணல்­தரை ஒழுங்­கையில் உள்ள செயற்­பாட்டுக் குழுவின் அலு­வ­ல­கத்தில் நடை­பெற்ற சந்­திப்­பின்­போதே அவர் இதனைத் தெரி­வித்தார்.

இது தொடர்­பாக அவர் மேலும் தெரி­விக்­கையில்,

இலங்­கையில் நடை­பெற்ற போர்க் குற்றம், இனப்­ப­டு­கொலை தொடர்பில் சர்­வ­தேச விசா­ரணை அவ­சியம் தேவை என்­பதை வலி­யு­றுத்திக் கடந்த மாதம் ஆரம்­பிக்­கப்­பட்ட கையெ­ழுத்துப் போராட்­டத்தில் சுமார் ஒரு இலட்­சத்து 50 ஆயி­ரத்­திற்கும் மேற்­பட்ட மக்­களின் அமோக ஆத­ரவு கிடைத்­துள்­ளது. மக்கள் தாமாக முன்­வந்து நீதி வேண்டி ஒப்­ப­மிட்­டுள்­ளனர்.

இந்த கையெ­ழுத்துப் போராட்டம் ஒரு­வ­ரையும் பாதிக்­காத வகையில் நடை­பெற்­றுள்­ளது. சர்­வ­தேச விசா­ர­ணைக்­காக தமது கையெ­ழுத்­துக்­களை இட்ட மக்­க­ளுக்கும் ஒத்­து­ழைப்புத் தந்த அனை­வ­ருக்கும் எமது நன்­றி­களைத் தெரி­வித்துக் கொள்­கின்றோம்.

மேலும் எமக்குக் கிடைக்­கப்­பெற்ற மூலப் பிர­தி­களை ஐக்­கிய நாடுகள் ஆணை­யாளர் அலு­வ­ல­கத்­திற்கு கிடைக்கச் செய்­வ­தற்கு ஐ.நா. வின் கொழும்பு அலு­வ­ல­கத்­திற்கு ஒப்­ப­டைக்க நட­வ­டிக்­கைகள் எடுத்­து­வரும் அதே­நேரம், அந்த கையெ­ழுத்தின் பிர­தி­களை மின் அஞ்சல் மூலம் ஐ.நா. ஆணை­யா­ள­ருக்கு அனுப்பும் நட­வ­டிக்­கையும் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

சர்வதேச விசாரணையை வலியுறுத்தி ஒன்றிணைந்த தமிழர் செயற்பாட்டுக்குழு தொடர்ந்தும் மக்களின் தேவைகளுக்காக போராட்டங்களை முன்னெடுக்கும் என அவர் தெரிவித்தார்.