வெளிநாட்டு நீதிமன்றத்துக்கு பொதுசன வாக்கெடுப்பு தேவை - பீரிஷ்
இலங்கையின் பிரஜைகளுக்கு எதிராக வழக்கு தொடரவே தண்டனை கொடுக்கவோ வெளிநாட்டு நீதிமன்றம் ஒன்று நிறுவப்படுமாக இருந்தால், அது தொடர்பில் பொதுசன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஷ் இதனை; தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போது அவர் இதனைக் கூறியுள்ளார். இது தொடர்பில் நாடாளுமன்றத்தின் 3ல்இரண்டு அறுதிப் பெரும்பான்மையையும் வெளிப்படுத்த வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.