சர்வதேச விசாரணையை வலியுறுத்தி தாயகம் எங்கும் மக்கள் போராட்டம்
இலங்கை மீதான சர்வதேச விசாரணையை வலியுறுத்தி தமிழர் தாயக மெங்கும் தொடர் மக்கள் போராட்டங்களை முன்னெடுப்பதற்கு மக்கள் மயப்படுத்தப்பட்ட குழுவொன்று நேற்றைய தினம் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.
இக்குழுவின் மூலம் மக்கள் போராட்டங்களை வடக்கு, கிழக்கு எங்கும் முன்னெடுத்து ஜெனிவா மனிதவுரிமை கூட்டத் தொடருக்கு முன்னதாக சர்வதேச மட்டத்தில் ஓர் அதிர்வினை ஏற்படுத்துவதென் றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இக்குழுவில் கட்சி பேதமின்றி தமிழர்களின் நீதிக்காக அனை வரையும் இணைந்து கொள்ளு மாறு குழுவின் தலைவர் பேராசிரி யர் வி.பி.சிவநாதன் வேண்டு கோள் விடுத்துள்ளார்.தமிழ்த் தேசிய மக்கள் முன் னணியின் அழைப்பின் பேரில் நேற்று மாலை கந்தர்மடம் மணல் தரை லேனில் உள்ள அலுவலகத் தில் பகிரங்க கூட்டமொன்று நடை பெற்றது. இக் கூட்டத்தின் போதே மேற்படி முடிவு எட்டப்பட்டுள்ளது.
அண்மையில் இலங்கை வந் திருந்த அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய அரசியல் விவகாரங் களுக்கான உதவி இராஜாங்க செயலர் நிஷா பிஸ்வால் இம்முறை உள்ளகப் பொறிமுறை ஒன்றுக்கு ஆதரவளிக்கப் போவதாக கூறிச் சென்றுள்ளார். அமெரிக்காவின் இவ் அறிவிப்பு குறித்து வடக்கு மாகாண சபை கடும் எதிர்ப்பு தெரிவித் திருக்கின்ற போதிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்தும் மெளனமாகவே இருந்து வருவதோடு ஒரு சிலர் மாறுபட்ட கருத்துக்க ளையும் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையிலேயே வடக்கு கிழக்கு மக் களை ஓரணியில் திரட்டி இலங்கை மீது சர்வதேச விசாரணையே வேண்டும் என வலியுறுத்தும் வகையில் மேற்படி குழு அங்குரார்ப் பணம் செய்யப்பட்டுள்ளது.
இக்குழுவின் தலைவராக பேராசிரியர் வி. ரி.சிவநாதனும் தலைமை ஒருங்கிணைப்பாளராக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் செயலாளராக யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் கே.ரி.கணேசலிங்கம் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இக்குழுவின் செயற்பாடுகள் குறித்து இன்று முற்பகல் 11 மணியளவில் நடைபெறவுள்ள பத்திரிகையாளர் சந்திப்பில் விளக்கப் படவுள்ளதாக தலைமை ஒருங்கிணைப்பாளர் தெரிவித்தார்.
மேலும் சர்வதேச விசாரணையை கோரும் குறித்த இக் குழுவில் விருப்பம் உள்ளவர்கள் எவரும் இணைய முடியும் எனத் தெரிவிக் கப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் வெள்ளிக்கிழமை அன்று யாழ்.பஸ் நிலையத்தில் மாபெரும் கையயழுத்து போராட்டமொன்றினை முன் னெடுக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.








