Breaking News

விசாரணை அறிக்கையில் இலங்கைக்கு பாரியளவில் பாதிப்பு கிடையாது

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவையின் விசாரணை அறிக்கையில் இலங்கைக்கு பாரியளவு பாதிப்பு கிடையாது என இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி பிரதீபா மஹானாம ஹேவா தெரிவித்துள்ளார்.

நேரடியாக பாதிப்பு ஏற்படாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.அடிப்படையில் இலங்கைப் படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் எதிராக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.தற்போது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு கிடையாது.

இவ்வாறான ஓர் நிலையில் இந்த அறிக்கை எவ்வளவு பக்கச்சார்பானது அல்லது இல்லை என்பதனை கூற முடியாது. யோசனையை முன்வைத்த அமெரிக்கா தற்போது நடு நிலையான கொள்கைகளைப் பேணி வருகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.