இனவழிப்புக்கு சர்வதேச விசாரணை வேண்டி கையெழுத்து போராட்டம்(புகைப்படங்கள்)
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் "இனவழிப்புக்கு பன்னாட்டு
விசாரணை வேண்டி கையெழுத்து போராட்டம்" ஆரம்பமாகி நடைபெற்றுவருகின்றது.தமிழ்த் தேசிய மக்கள் முன்னனியின் தலைவர் திரு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் , இலங்கை தமிழ் அரசு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் திரு சிவஞானம் சிறீதரன், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் திரு கந்தையா பிரேமச்சந்திரன் மற்றும் ரெலோ கட்சியின் முக்கியஸ்தரும் வடமாகாணசபை உறுப்பினருமான சிவாஜிலிங்கம் போன்ற பலர் அந்த போராடத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து அனைத்து தரப்பினரிடமிருந்தும் கையொப்பம் பெறும் வேலைத்திட்டம் வடக்கு கிழக்கில் முழுவீச்சுடன் செய்வதற்கான முன்னெடுப்புக்களை குறித்த தரப்பினர் ஈடுபட்டிருப்பதாகவும் இதில் வடமாகாணசபையின் ஒத்துழைப்பும் பெற்றுக்கொள்ளப்படவிருப்பதாகவும் தெரியவருகின்றது.