Breaking News

முல்லைத்தீவு கடலில் இரு இளைஞர்கள் பலி

முல்லைத்தீவு கடலில் குளிக்கச்சென்ற இளைஞர்கள் இருவர் பலியான சம்பவம் இன்று சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

முல்லைத்தீவு உடுப்புக்குளத்தை சேர்ந்த 17 வயதுடைய சரவணகுமார் பிரவீன் மற்றும் முள்ளியவளையை சேர்ந்த 17 வயதுடைய சத்தியநாதன் அனுசன் ஆகிய இருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். 

உயிரிழந்த உடுப்புக்குளத்தை சேர்ந்த சரவணகுமார் பிரவீனின் சடலம் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.முள்ளியவளையை சேர்ந்த சத்தியநாதன் அனுசனின் சடலம் இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.