Breaking News

ஐ.தே.க. அரசின் 100 நாள் வேலைத்திட்டத்தின் முதல் தொகுதி வீடுகள் கையளிப்பு

ஐக்கிய தேசியக் கட்சி அரசின் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் தோட்ட மக்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட வீட்டுத் தொகுதியின் முதலாவது கட்டம் இன்று மக்கள் பாவனைக்கு விடப்பட்டது.

கடந்த நான்கு வருடங்களுக்கு முன்னர் தீயினால் அழிவுற்ற மஸ்கெலிய மொகா தோட்டத்தில் குடியிருந்த 22 குடும்பங்களுக்காக இந்த வீடுகள் கையளிக்கப்பட்டன.

தனி வீடுகளாக அமைக்கப்பட்டுள்ள இவை அமைச்சர் பலனி திகாம்பரத்தினால் கையளிக்கப்பட்டன. ஒரு வீட்டுக்காக 12 லட்சம் ரூபாவை செலவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.