Breaking News

புலிகளை விடுவித்து நாட்டில் யுத்தம் நடந்த வரலாற்றையே மாற்றிவிட முயற்சி - என்கிறார் சம்பிக்க

புலி­களை விடு­வித்து நாட்டில் யுத்தம் நடந்த வர­லாற்­றையே மாற்­றி­விட சிலர் முயற்­சிக்­கின்­றனர். புலி­க­ளுக்கு மன்­னிப்பு வழங்க வலி­யு­றுத்­துவோர் இரா­ணு­வத்தை தண்­டிக்க முயற்­சிக்­கின்­றனர் அத­னா­லேயே அமைச்­ச­ர­வையில் சிறையில் உள்ள புலிச் சந்தேக நபர்களை விடுவிப் பதற்கு எதிர்ப்பை தெரி­வித்தேன் என்று அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க கூறினார். 

கைது­செய்­யப்­பட்டு தடுப்பில் வைத்­துள்ள இந்த கைதி­களை விடு­விப்­பது தொடர்பில் எடுக்கப்படும் அரசாங்கத்தின் முயற்சிகளை நான் விரும்­ப­வில்லை. இதற்கு எனது கடு­மை­யான எதிர்ப்பை தெரி­வி­க்கின்றேன் எனவும்அவர் குறிப்­பிட்டார்.

அர­சியல் கைதி­க­ளுக்கு பொது மன்­னிப்பு வழங்­கக்­கோரி அமைச்சர் டி.எம்.சுவா­மி­நாதன் அமைச்­ச­ர­வையில் சமர்ப்பித்த பிரேரணைக்கு நீதி­ய­மைச்சர் விஜ­ய­தாச ராஜபக்ஷ மற்றும் அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அதற்­கான கார­ணத்தை கொழும்பிலிருந்து வெளிவரும் தமிழ் பத்திரிகை ஒன்று எழுப்பிய கேள்விக்கே அமைச்சர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அவர் மேலும் கூறு­கையில்,

இலங்­கையில் அர­சியல் கைதிகள் என எவரும் இல்லை. யுத்த கால­கட்­டத்தில் கைது­செய்­யப்­பட்ட தமி­ழர்கள் அர­சியல் கைதிகள் அல்ல. அவர்கள் விடு­த­லைப்­பு­லிகள் இயக்­கத்தை சேர்ந்­த­வர்கள். அவர்­களை நியா­யப்­ப­டுத்த ஒரு­சிலர் முயற்­சிக்­கின்­றனர். அவ்­வாறு இருக்­கையில் கைது செய்­யப்­பட்டு சிறை­களில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள விடு­த­லைப்­புலி உறுப்­பி­னர்­களை விடு­விப்­பது தொடர்பில் அர­சாங்கம் முயற்­சிப்­பது வருத்­த­ம­ளிக்கும் விட­ய­மாகும். கைது­செய்­யப்­பட்டு தடுப்பில் வைத்­துள்ள இந்த கைதி­களை விடு­விப்­பது தொடர்பில் எடுக்கும் முயற்­சியை நாம் விரும்­ப­வில்லை. இதற்கு எனது கடு­மை­யான எதிர்ப்பை தெரி­வி­கின்றேன்.

மேலும் இவர்­களை விடு­விப்­பது நாட்டில் மூன்று தசாப்­பத காலம் நடை­பெற்ற யுத்­தத்தை மறக்­க­டிக்கச் செய்யும் வகையில் அமையும். இந்த நாட்டில் ஆயுதம் ஏந்தி போரா­டிய பயங்­க­ர­வா­தி­களின் நாச­கார செயற்­பா­டுகள் மூடி­ம­றைக்­கப்­பட்­டு­விடும். அதற்­கான நட­வ­டிக்­கை­களை நாமே ஏற்­ப­டுத்­தி­வி­டக்­கூ­டாது. அதேபோல் புலி­களை விடு­விக்­கவும் அவர்­க­ளுக்கு பொது மன்­னிப்பு வழங்­கவும் வலி­யு­றுத்­து­ப­வர்கள் மாறாக இரா­ணு­வத்தை மாத்­திரம் தண்­டிக்கும் வகையில் செயற்­ப­டு­வது ஏன். இரா­ணுவம் போர்க்­குற்றம் புரிந்­துள்­ள­தாக சர்­வ­தேச மட்­டத்தில் முறைப்­பா­டிடும் இவர்கள் தமது தரப்பு செய்த தவ­று­களை நியா­யப்­ப­டுத்த முயற்­சிக்­கின்­றனர். சர்­வ­தேச நீதி­மன்றில் இரா­ணு­வத்தை குற்­ற­வா­ளி­யாக்கி அவர்­களை தண்­டிக்க எடுக்கும் முயற்­சியின் ஒரு கட்­ட­மா­கவே இந்த புலி­களின் விடு­த­லையும் அமைந்­துள்­ளது. புலி­களை நியா­யப்­ப­டுத்தி இரா­ணு­வத்தை குற்­ற­வா­ளி­யாக்­கவே இந்த நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன.

விடு­தலைப் புலி­களை விடு­வித்து அவர்­களை நியா­யப்­ப­டுத்தும் தமிழர் தரப்­பினர் மாறாக இரா­ணு­வத்தின் மீதும் குற்றம் இல்லை என்­பதை ஏற்­றுக்­கொள்­வார்­களா. அவர்­களை நியா­யப்­ப­டுத்தும் எமது கோரிக்­கை­க­ளையும் ஏற்­றுக்­கொள்­வார்­களா? புலிப் பயங்­க­ர­வா­தி­க­ளுக்கு நியாயம் கேட்­பதைப் போலவே நாம் இந்த நாட்டின் இரா­ணு­வத்­திற்­காக நியாயம் கேட்­கின்றோம். ஆனால் புலி­களை மட்டும் நியா­ய­ப­டுத்தி இரா­ணு­வத்தின் மீது போர்க்­குற்­ற­வா­ளிகள் என்ற முத்­திரை பொறிப்­பது எந்த வகை­யிலும் நியா­ய­மற்­றது. அதை நாம் வன்­மை­யாக கண்­டிக்­கின்றோம். பயங்­க­ர­வாத சட்­டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்

பட்டுள்ள கைதிகளை விடுவிக்க அமைச் சரவையில் கொண்டுவந்த தீர்மானத்தை நான் எதிர்க்கவும் இதுவே காரணமாகும். தமிழ் மக்களின் பிரச்சினைகள் வேறு புலிகளை விடுவிக்கும் பிரச்சினை வேறு. இந்த சிக்கலை சட்ட ரீதியில் கையாள வேண்டும். யாருடைய தனிப்பட தேவைக் காகவும் சட்டத்தை மாற்றியமைக்க கூடாது என்றார்.