Breaking News

சர்வதேச தரத்திற்கு ஏற்ற வகையில் கல்வி முறைமையில் மாற்றம் - அகில

இலங்கையின் கல்வி முறைமை சர்வதேச தரத்திற்கு உயர்த்தப்படும் என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

கல்வியின் ஊடாக நாட்டின் எதிர்காலத்தையே மாற்றிவிட முடியும். கல்வி அமைச்சுப் பொறுப்பு மிகவும் பாரதூரமான கடமைகளை உள்ளடக்கியது. தொழில்களை செய்யக் கூடிய வகையிலும் நாட்டின் கல்வி முறைமையில் மாற்றம் செய்யப்படும். 

ஒரு சில பொருட்களின் விலைகள் உயர்வடைந்துள்ளதனை ஒப்புக் கொள்கின்றேன்.கொழும்பு ஊடகமொன்றுக்கு அளித்த நேர் காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அத்தியாவசிய பொருட்கள் பலவற்றின் விலைகளை இந்த அரசாங்கம் குறைத்துள்ளது. 

எரிபொருட்களின் விலைகளை குறைத்துள்ளது. அரச ஊழியர்களின் சம்பளங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. அரசாங்கம் வழங்கிய சலுகைகள் நிவாரணங்களை மக்கள் அனுபவிக்கின்றனர். தனியார்துறை ஊழியர்களுக்கு சம்பளங்களை உயர்த்துவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. நாட்டின் பணத்தை விரயமாக்கும் வகையில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
 
புதிய தொழில்வாய்ப்புக்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன்இ வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிகளவில் முதலீடு செய்ய ஆரம்பித்துள்ளனர் என அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.