Breaking News

200 க்கும் அதிகமான கைக்குண்டுகள் மீட்பு

கிளிநொச்சி பரவிபாய்சான் பகுதியிலுள்ள தனிநபர் காணியில் இருந்து நூற்றுக்கும் அதிகமான கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

அண்மையில் ஜனாதிபதியால் மீள கையளிக்கப்பட்ட காணியொன்றில் இருந்தே இந்த குண்டுகள் மீட்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.குறித்த காணியில் இருந்த கழிவறையை துப்புரவு செய்யும் பணிகளில் ஈடுபட்டிருந்த பெண் ஒருவரின் மண்வெட்டியில் கைக்குண்டு ஒன்று சிக்கியுள்ளது.

இது குறித்து கிளிநொச்சி இராணுவத்திற்கு அறிவித்ததை அடுத்து அங்கு விரைந்த அவர்கள் காணியில் இருந்து 200 க்கும் அதிகமான கைக் குண்டுகளை மீட்டுள்ளனர்.இவற்றில் 154 கைக்குண்டுகள் பாவனைக்கு உகந்ததாகவும் 94 கைக்குண்டுகள் பாவனைக்கு உதவாத வகையிலும் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.