Breaking News

உள்­ளக விசாரணைப் பொறி­மு­றையின் இறுதி வடிவம் குறித்த கலந்துரையாடல்கள் சில தினங்களில்

போர்க்­குற்ற மற்றும் மனித உரிமை மீறல் குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்­பாக அர­சாங்கம் முன்­னெ­டுக்­க­வுள்ள உள்­ளக விசா­ரணைப் பொறி­மு­றையின் வடி­வத்தை தயா­ரிக்கும் நோக்­கி­லான தேசிய மட்ட கலந்­து­ரை­யா­டல்­களை அர­சாங்கம் ஒரு சில தினங்­களில் ஆரம்­பிக்­க­வுள்­ள­தாக தெரி­ய­வ­ரு­கி­றது.

குறிப்­பாக எதிர்­வரும் ஜன­வரி மாதம் இறு­தி­வரை நடை­பெ­ற­வுள்ள இந்தக் கலந்­து­ரை­யா­டல்­களின் மூல­மா­கவே அர­சாங்கம் உள்­ளக விசா­ரணை பொறி­மு­றையின் இறுதி வடி­வத்தை தயா­ரிக்­க­வுள்­ளது. அர­சாங்கம் ஏற்­க­னவே தயா­ரித்து வைத்­துள்ள அடிப்­படை வேலைத்­திட்­டத்­தினை மக்கள் முன் வைப்­ப­துடன் அதன் பின்னர் கிடைக்­கின்ற யோச­னை­க­ளையும், திட்­டங்­க­ளையும் பரி­சீ­லித்து இறுதி வடி­வத்தை தயா­ரிக்­க­வுள்­ளது.

எதிர்­வரும் 22 ஆம் திகதி ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் சர்­வ­கட்­சிக்­கு­ழுக்­கூட்டம் நடை­பெ­ற­வுள்­ளது. இந்த சர்­வ­கட்சி குழுக்­கூட்­டத்தில் பங்­கேற்­கு­மாறு பாரா­ளு­மன்­றத்தில் அங்கம் வகிக்­கின்ற அனைத்து அர­சியல் கட்­சி­க­ளுக்கும் அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்­ளது. 

இதன் போது ஐக்­கிய நாடு­களின் மனித உரிமை அலு­வ­ல­கத்தின் அறிக்கை மற்றும் அதன் பரிந்­து­ரைகள் மனித உரிமை பேர­வையில் இலங்கை தொடர்­பாக நிறை­வேற்­றப்­பட்ட பிரே­ரணை அதன் பரிந்­து­ரைகள் என்­பன தொடர்­பா­கவும் விரி­வாக கலந்­து­ரை­யா­டப்­ப­ட­வுள்­ளது. இந்த சர்­வ­கட்சி குழுக்­கூட்­டத்தின் பின்­னரே அர­சாங்கம் நாட­ளா­விய ரீதியில் கலந்­து­ரை­யா­டல்­களை நடத்­த­வுள்­ள­துடன் ஆலோ­ச­னை­க­ளையும் பெற­வுள்­ளது.

ஐக்­கிய நாடுகள் மனித உரிமை அலு­வ­லகம் வெளி­யிட்ட இலங்கை தொடர்­பான அறிக்­கையில் போர்க்­குற்ற மற்றும் மனித உரிமை மீறல் குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்பில் வெளி­நாட்டு நீதி­ப­திகள் விசா­ர­ணை­யா­ளர்கள், வழக்­க­றி­ஞர்கள் உள்­ளிட்­டோரை உள்­ள­டக்­கிய கலப்பு நீதி­மன்றம் அமைக்­கப்­பட்டு விசா­ரணை நடத்­தப்­ப­ட­வேண்­டு­மென பரிந்­துரை செய்­துள்­ளது.

எனினும் அதன் பின்னர் மனித உரிமை பேர­வையில் அமெ­ரிக்­கா­வினால் கொண்­டு­வ­ரப்­பட்டு நிறை­வேற்­றப்­பட்ட இலங்கை தொடர்­பான பிரே­ரணை பொது­ந­ல­வாய வெளி­நாட்டு நீதி­ப­திகள் மற்றும் விசா­ர­ணை­யா­ளர்­களின் பங்­கேற்­புடன் உள்­நாட்டு சட்­ட­திட்­டங்­க­ளுக்கு அமைய விசா­ரணை நடத்­த­வேண்­டு­மென பரிந்­துரை செய்­தது. அந்த வகையில் தற்­போது அமெ­ரிக்­கா­வினால் கொண்­டு­வ­ரப்­பட்டு நிறை­வேற்­றப்­பட்­டுள்ள பிரே­ர­ணைக்கு அமை­வாக உள்­ளக விசா­ர­ணையை முன்­னெ­டுப்­பது தொடர்பில் அர­சாங்கம் இறுதி வடி­வத்தை. தயா­ரிப்­ப­தற்கு தேசிய மட்டக் கலந்­து­ரை­யா­டல்­களை நடத்­த­வுள்­ளது.

குறிப்­பாக பொது­ந­ல­வாய மற்றும் வெளி­நாட்டு நீதி­ப­தி­களை உள்­ளக விசா­ரணை பொறி­மு­றையில் உள்­ளீர்க்­க­வேண்டும் என்றும் ஐ.நா.வின் கண்­கா­ணிப்பு அலு­வ­ல­கங்கள் அமைக்­கப்­ப­ட­வேண்டும் என்றும் பொறி­மு­றை­யா­னது சுயா­தீ­ன­மா­கவும், நம்­ப­கத்­தன்மை மிக்­க­தாக அமை­ய­வேண்டும் எனவும் சர்­வ­தே­சத்­தினால் வலி­யு­றுத்­தப்­பட்டு வரு­கின்­றது. அது­மட்­டு­மன்றி சர்­வ­தே­சத்தின் உத­வி­க­ளையும் தொழி­லுட்ப ஆலோ­ச­னை­க­ளையும் இலங்கை பெற்றுக் கொள்­ள­வேண்டும் என்றும் ஐக்­கிய நாடுகள் மனித உரிமை அலு­வ­லகம் வலி­யு­றுத்­தி­யுள்­ளது.

ஆனால் பொது­ந­ல­வாய மற்றும் வெளி­நாட்டு நீதி­ப­தி­களை உள்­ளக விசா­ரணை பொறி­மு­றையில் உள்­ளீர்க்க கூடாது என தென்­னி­லங்­கையில் கருத்­துக்கள் முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றன. இந்­நி­லை­யி­லேயே அர­சாங்கம் எவ்­வாறு இந்த உள்­ளக விசா­ரணை பொறி­மு­றையின் இறுதி வடி­வத்தை தயா­ரிக்க உள்­ளது என்­பது குறித்து ஆரா­ய­வுள்­ளது.

அர­சாங்­கத்தின் தற்­போ­தைய அடிப்­படைத் திட்­டத்தின் பிர­காரம் உண்­மையைக் கண்­ட­றி­வ­தற்­கான ஆணைக்­குழு ஒன்று அமைக்­கப்­படும். அதில் காணாமல் போனோர் குறித்த அலு­வ­லகம் மற்றும் மதத் தலை­வர்­களைக் கொண்ட சபை என்­பன உள்­ளீர்க்­கப்­படும். அது­மட்­டு­மன்றி, பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நட்­ட­ஈடு வழங்­கு­வ­தற்­கான பொறி­மு­றை­யொன்று நிறு­வப்­ப­ட­வுள்­ளது.

அத்­துடன் புதிய அர­சி­ய­ல­மைப்பின் ஊடாக இனப்­பி­ரச்­சி­னைக்கு அர­சியல் தீர்வு காண்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வுள்­ளது. இவ்­வா­றான அடிப்­படைப் பொறி­மு­றை­யொன்­றினை அர­சாங்கம் தற்­போது தயா­ரித்­துள்­ளது. அந்த அடிப்­படை திட்­டமே எதிர்­வரும் மூன்று மாதக் காலப்­ப­கு­தியில் நாட­ளா­விய ரீதியில் கலந்­து­ரை­யா­ட­லுக்கு எடுக்­கப்­ப­ட­வுள்­ளது.

மேலும் அர­சாங்கம் உரு­வாக்­க­வுள்ள உண்­மையைக் கண்­ட­றியும் ஆணைக்­கு­ழு­வா­னது தென்­னா­பி­ரிக்­காவில் முன்­னெ­டுக்­கப்­பட்ட உண்­மையைக் கண்­ட­றியும் ஆணைக்­கு­ழுவின் விசேட பண்­பு­களை உள்­ள­டக்­கி­ய­தாக அமையும் எனவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

எனவே தென்­னா­பி­ரிக்­காவின் உண்­மையைக் கண்­ட­றியும் ஆணைக்­கு­ழுவின் செயற்­பா­டுகள் தொடர்­பான அனு­ப­வங்­களை பெற்­றுக்­கொள்­வ­தற்கும் அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுக்­க­வுள்­ள­தா­கவும் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. இந்த வகை­யி­லேயே இன்னும் சில தினங்­களில் இந்த தேசிய மட்டக் கலந்­து­ரை­யா­டல்­க­ளையும் ஆலோ­ச­னை­க­ளையும் நடத்­து­வ­தற்கு அர­சாங்கம் தயா­ரி­வ­ரு­கி­றது.

மேலும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹூசைனுக்கும் இலங்கை வருமாறு அரசாங்கத்தினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அண்­மையில் இது தொடர்பில் கருத்து வெளி­யிட்­டி­ருந்த வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர ஜன­வரி மாதம் தொடக்கம் 18 மாதங்­களில் உள்­ளக விசா­ரணை பொறி­முறை முன்­னெ­டுக்­கப்­பட்டு முடிவு செய்­யப்­படும் என்று கூறி­யி­ருந்தார்.

அத்­துடன் உள்­ளக கட்­ட­மைப்பு தொடர்பில் விளக்­க­ம­ளித்­தி­ருந்த வெளி­வி­வ­கார அமைச்சர் முத­லா­வ­தாக உண்­மையை கண்­ட­றியும் ஆணைக்­குழு நிறு­வப்­படும். அதில் இரண்டு பிரி­வுகள் இருக்கும். அதா­வது மத தலை­வர்­களைக் கொண்ட ஒரு குழுவும் ஆணை­யா­ளர்­களைக் கொண்ட ஒரு குழுவும் இயங்கும். பாதிக்­கப்­பட்ட மக்கள் இதன்­மூலம் நீதியை பெறலாம் என கூறினார்.

தென்­னா­பி­ரிக்­காவின் ஆலோ­ச­னை­யுடன் இதனை முன்னெடுப்போம். இரண்டாவதாக சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் உதவியுடன் காணாமல் போனோர் தொடர்பில் அலுவலகம் ஒன்று அமைக்கப்படும். மூன்றாவதாக நீதிக்கான உரிமைக்காக நீதிமன்ற பொறிமுறை உருவாக்கப்படும். அடுத்ததாக இழப்பீடு பொறிமுறை உருவாக்கப்படும். இறுதியாக கடந்த காலங்களில் ஏற்பட்ட பிரச்சினைகளை போன்ற எந்தவொரு பிரச்சினையும் ஏற்படாது இருக்க தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும். இதுதான் நாம் திட்டமிட்டுள்ள உள்ளக விசாரணை பொறிமுறைக் கட்டமைப்பாகும் என்றும் அவர் கூறியிருந்தார்.

இவ்வாறான பின்னணியிலேயே அரசாங்கம் உள்ளக விசாரணைக்கான இறுதி வடிவத்தை தயாரிப்பதற்கான தேசிய மட்ட கலந்துரையாடல்களையும் ஆலோசனைகளையும் நடத்தவுள்ளது.