Breaking News

உள்நாட்டு விசாரணையால் எந்த பலனும் இல்லை: ஆணையர் செய்ட் அல் ஹூசைன்(காணொளி)

இலங்கை இறுதிக்கட்டப் போரின் போது நிகழ்ந்த
மனித உரிமை மீறல்கள் குறித்த, ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் அறிக்கை முறைப்படி தாக்கல் செய்யப்பட்டு, உறுப்பு நாடுகளின் கருத்துக்கள் இன்று கேட்கப்பட்டன.

அதில், ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்புகள் பெரும்பாலானவை, இலங்கை ஆதரவான கருத்துக்களையே வெளியிட்டுள்ளன. கலப்பு நீதிமன்ற விசாரணையை ஏற்றுக்கொள்ள இயலாது என தெரிவித்துள்ள தமிழர்கள், சர்வதேச நீதிமன்ற விசாரணையே இறுதித் தீர்வாக இருக்கும் என்பதை வலியுறுத்தியுள்ளனர். 

ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின், 30-வது கூட்டம், சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில், ஒரு வார காலத்திற்கு முன்பு, இலங்கை இறுதிப் போரின்போது நிகழ்ந்த மனித உரிமை மீறல் தொடர்பான, ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் அறிக்கை வெளியிடப்பட்டது. இதையடுத்து, அமெரிக்காவும் தனியாக, வரைவு தீர்மானம் ஒன்றை தாக்கல் செய்தது. 

இந்நிலையில், ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் அறிக்கை மீதான பொதுவிவாதம் இன்று நடைபெற்றது. இதனை தொடங்கிவைத்துப் பேசிய ஐ.நா மனித உரிமைகள் ஆணையர் செய்ட் அல் ஹூசைன், இலங்கை இறுதிப்போரின் போது மனித உரிமை மீறல்கள் நிகழ்ந்து போர்குற்றத்திற்கான ஆதாரங்கள் இருப்பதாக தெரிவித்தார். 

இறுதிப்போரின்போது, சட்டவிரோத படுகொலைகள் நிகழ்த்தப்பட்டதுடன், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், பத்திரிக்கையாளர்களும், சட்ட விதிகளை மீறி கொல்லப்பட்டதாக செய்ட் அல் ஹூசைன் குறிப்பிட்டார். சர்வதேச போர்க்குற்றமாக கருதக்கூடிய அளவிற்கு மனித உரிமை மீறல் நடைபெற்றிருப்பதாகவும் ஐ.நா மனித உரிமை ஆணையர் தெரிவித்தார். இலங்கையில் நடைபெற்றிருப்பது சாதாரண கொலைகள் அல்ல என்றும், அவை சட்டவிரோத படுகொலைகள் என்பதால், பன்னாட்டு கலப்பு நீதிமன்ற பொறிமுறையை முன்னிறுத்தும், கலப்பு நீதிமன்ற விசாரணை நடத்துவதையே, ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் விரும்புவதாக அவர் கூறினார். 

தமிழர் சார்பில் உரையாற்றியவர்களின் உரை கீழே


இலங்கை தாமாகவே நடத்தும் உள்நாட்டு விசாரணையால் எந்த பயனும், பலனும் இல்லை என்றும் செய்ட் அல் ஹூசைன் சுட்டிக்காட்டினார். இதற்கு பதில் அளித்துப் பேசிய இலங்கை பிரிநிதி, ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தோடு இணைந்து செயல்பட்டு, நடவடிக்கையையும், விசாரணையையும் மேற்கொள்ளும் என்றார். 

இதனைத் தொடர்ந்து, அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஜப்பான், ரஷ்யா, பாகிஸ்தான், கியூபா, எஸ்தோனியா உள்ளிட்ட உறுப்பு நாடுகளின், இலங்கையின் நிலைப்பாட்டிற்கும், அந்நாடு எடுக்கும் நடவடிக்கைகளுக்கும் ஆதரவு தெரிவித்தன.

தொடர்புடைய செய்திகள்

 ஐ.நா விசாரணை கண்டறிந்துள்ள விடயங்கள் மிகவும் பாரதூரமானவை(காணொளி) 

40 ஆயிரம் மக்களின் உயிரிழப்பைத் தவிர்த்திருக்க முடியும்-நவநீதம்பிள்ளை (காணொளி)

என்ன செய்யப் போகின்றது ஐ.நா? விளக்குகிறார் பேச்சாளர்(காணொளி)