கெக்கிராவை வங்கியில் கொள்ளை முயற்சி: இருவர் பலி
கெக்கிராவை பிரதேசத்தில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் இருவர் உயிரிழிந்துள்ளனர்.
இதன்போது தனியார் வங்கி ஒன்றில் கொள்ளையிட முற்பட்ட சம்பவம் முறியடிக்கப்பட்டுள்ளது.சம்பவத்தில், கொள்ளையிடுவதற்காக வந்த சந்தேகநபர் தான் வைத்திருந்த கைக்குண்டை வெடிக்க செய்ததால் சந்தேக நபரும் வங்கியின் பாதுகாப்பு ஊழியரும் உயிரிழந்துள்ளனர்.
சம்வபம் குறித்து கெக்கிராவைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.








