அடைமழையினால் கிளிநொச்சியில் பெருமளவானோர் பாதிப்பு
இரணைமடு குளத்தின் வான்கதவுகள் இன்று காலை அரை அடி (6 இஞ்ச்) வரை திறந்து விடப்பட்டுள்ளதுடன், ஏனைய குளங்களும் நீரினால் நிறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த வருடம் இரணைமடு குளத்தினை திறந்து வைப்பதற்கு அரசியல் தலையீடுகள் காணப்பட்ட போதிலும், இம்முறை இரணைமடு குளத்தினை பராமரிக்கும் பொறியியலாளரினால் திறந்து வைக்கப்பட்டது.
கடந்த வருடம் வட மாகாண விவசாய அமைச்சர் ஐங்கரநேசன், நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் ஆகியோர் இரணைமடு வான் கதவைத் திறந்து வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதேவேளை, சாந்தபுரம், பொன்னகர் கிராமங்களை சேர்ந்த மக்கள் வெள்ளம் காரணமாக பாடசாலைகளில் தஞ்சமடைந்துள்ளனர்.தொடர்ந்தும் மழை பெய்து வருவதனால் பரந்தன் சிவபுரம் மக்கள் வாழும் பகுதிகளும் வெள்ளத்தில் நிறைந்து காணப்படுகின்றது.








