Breaking News

கூட்டமைப்புக்குள் இருவேறு கருத்துகள் - கைதி­களின் நிரந்­தர விடு­த­லைக்கு பெரும் தடை­யாக உள்­ளது

தமிழ் அர­சியல் கைதி­களின் விடு­தலை விவ­கா­ரத்தில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்குள் இரு­வேறு கருத்­துக்கள் நில­வு­கின்­றன. இது கைதி­களின் நிரந்­தர விடு­த­லைக்கு பெரும் தடை­யாக உள்­ளது. இதனை கருத்திற் கொண்டு தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பினர் எமது உற­வு­க­ளுக்­காக ஒன்­றி­ணைந்து செயற்பட வேண்­டு­மென கைதி­களின் உற­வி­னர்கள் மற்றும் பெற்­றோர்கள் தெரி­விக்­கின்­றனர்.

நவம்பர் 7 ஆம் திக­திக்கு முன்னர் அர­சியல் கைதி­களின் விடு­தலை தொடர்பான சரி­யான நிலைப்­பாட்டை தெளி­வுப­டுத்த வேண்டும், பொது மன்­னிப்பின் அடிப்­ப­டையில் தமிழ் அரசியல் கைதி­களை விடு­தலை செய்ய வேண் டும் அல்­லது நிரந்­தர தீர்­வாக பொது விடு­த­லையை வலி­யு­றுத்தி அனை­வரும் ஏற்­றுக்­கொள்ளும் வகை யிலான தீர்­வொன்­றினை முன்­வைக்க வேண்­டு­மெனக் கோரி தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வரும் எதிர்க்­கட்சித் தலை­வ­ரு­மா­கிய இரா. சம்­பந்­த­னுக்கு தமிழ் அர­சியல் கைதி­களின் உற­வி­னர்கள் மற்றும் பெற்­றோர்கள் கடி­த­மொன்­றினை அனுப்பி வைத்­துள்­ளனர்.

இது குறித்து தமிழ் அர­சியல் கைதி­களின் உற­வுகள் மேலும் தெரி­விக்­கையில்,

தமிழ் அர­சியல் கைதி­களை பொது மன்­னிப்பின் அடிப்­ப­டையில் விடு­தலை செய்­வ­துதான் ஒரே தீர்வு என தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் ஒரு சாரார் கூறி வரு­கின்­றனர். அதே­வேளை, பொது மன்­னிப்பின் அடிப்­ப­டையில் விடு­தலை செய்­வ­தா­னது போர்க்­குற்ற விசா­ர­ணைக்கு சாத­க­மாக அமைந்­து­வி­டு­மென இன்­னொரு சாராரும் கூறி வரு­கின்­றனர். இவ்­வாறு கூட்­ட­மைப்­புக்குள் இரு­வேறு கருத்­துக்கள் நில­வு­வ­தா­னது பெரும் வேத­னை­யையும் கவ­லை­யையும் தரு­கி­றது.

நீண்ட கால­மாக எவ்­வித விசா­ர­ணை­க­ளு­மின்றித் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள தமிழ் அர­சியல் கைதி­களை விடு­தலை செய்­யு­மாறு வலி­யு­றுத்தி கடந்த காலங்­களில் பல்­வேறு போராட்­டங்­களை நடத்­தினோம். அந்த சந்­தர்ப்­பங்­களில் எமக்கு பலர் பல்­வேறு வித­மான வாக்­கு­று­தி­களை வழங்­கி­னார்கள். ஆனால் இது­வ­ரையில் கைதி­களின் விடு­தலை குறித்து எந்­த­வொரு சரி­யான நிலைப்­பாடும் எட்­டப்­ப­ட­வில்லை.

இவ்­வாறு பல்­வேறு சந்­தர்ப்­பங்­களில் எமது கோரிக்­கைகள் நிரா­க­ரிக்­கப்­பட்டு நாம் ஏமாற்­றப்­பட்டோம். ஆகையால் தான் கடந்த 12 ஆம் திகதி தமிழ் அர­சியல் கைதிகள் தமது விடு­த­லையை வலி­யு­றுத்தி மீண்டும் போராட்­டத்தை ஆரம்­பித்­தனர். அந்த சந்­தர்ப்­பத்தில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வரும் எதிர்க்­கட்சி தலை­வ­ரு­மா­கிய இரா. சம்­பந்­தனின் தலை­யீட்­டினை தொடர்ந்து உண்­ணா­வி­ரதம் கைவி­டப்­பட்­டது.

ஜனா­தி­பதி மீது தமக்கு நம்­பிக்கை இருப்­ப­தா­கவும் அவ­ருடன் பேச்­சு­வார்த்­தை­களை நடத்தி கைதிகள் விடு­தலை குறித்து சரி­யான நிலைப்­பாட்டை எடுப்­ப­தா­கவும் வாக்­கு­றுதி அளித்தார். அதற்­கி­ணங்­கவே தமிழ் அர­சியல் கைதிகள் தமது போராட்­டத்தை கைவிட்­டனர். எனவே கால­தா­ம­த­மின்றி எதிர்­வரும் 7 ஆம் திக­திக்கு முன்னர் கைதிகள் விடு­தலை விவ­காரம் குறித்து எதிர்க்­கட்சி தலைவர் எமக்கு தெளி­வு­ப­டுத்த வேண்டும்.

தமிழ் அர­சியல் கைதி­களை பிணையில் விடு­விப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­யினை மேற்­கொள்­ள­வுள்­ள­தாக அர­சாங்கம் அறி­வித்­துள்­ளது. அதே­வேளை, சகல அர­சியல் கைதி­க­ளையும் பிணையில் விடு­விக்க கூடிய சாத்­திய கூறுகள் இல்லை என சட்ட மா அதிபர் தெரி­வித்­துள்ளார்.

புதிய ஆட்­சி­யி­லா­வது தமிழர் அடிப்­படை பிரச்­சினை தீர்க்­கப்­ப­டு­மென எண்­ணி­யி­ருந்த போதும் கைதிகள் விடு­தலை விட­யத்தில் கூட இது­வ­ரையில் எவ்­வித முன்­னேற்­றமும் காணப்­பட்­ட­வில்லை. எனவே இவ்­வா­றான சந்­தர்ப்­பத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஒருமித்த குரலாக ஒன்றிணைந்து தமிழ் அரசியல் கைதிகளின் நிரந்தர தீர்வுக்காக செயற்பட வேண்டும் எனவும் அக்கடிதத்தில் வலியுறுத்தியுள்ளதாகவும் அக்கடிதத்தின் பிரதியொன்று யாழ். மாவட்ட தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கைதிகளின் உறவுகள் தெரிவிக்கின்றனர்.