Breaking News

தீபாவ­ளியை முன்­னிட்­டு­ அ­ர­சியல் கைதி­களை பொது மன்­னிப்பில் விடு­தலை செய்­ய வேண்டும் - வட­மாகாண முத­ல­மைச்சர் கோரிக்கை

தீபா­வ­ளியை முன்­னிட்டு இன நல்­லி­ணக்­கதை ஏற்­ப­டுத்தும் வகையில் தமிழ் அர­சியல் கைதிகள் பொது மன்­னிப்பு அடிப்­ப­டையில் விடு­தலை
செய்­யப்­ப­ட­வேண்டும் என வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி. விக்­னேஸ்­வரன் கோரிக்கை விடுத்­துள்ளார்.

விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,

நாட்­டி­லுள்ள சிறை­களில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள தமிழ் அரசில் கைதி­களை விடு­தலை செய்­யாது அரசு பின்­னிற்­ப­தா­னது ஏதோ­வொரு அர­சியல் கார­ணத்­திற்­கான நாட­க­மாக இருக்­கலாம் என்றே எனக்கு தோன்­று­கி­றது.

ஏதா­வ­தொரு விட­யத்தை எங்­களை கொண்டு செய்­வ­தற்கு இவர்­களை வைத்­தி­ருக்க வேண்­டிய நிர்­ப்பந்தம் தமக்­குள்­ள­தென்று அவர்கள் நினைக்­கி­றார்­களோ என நாங்கள் நினைக்­க­வேண்­டி­யுள்­ளது. கைதிகள் விடு­தலை தொடர்பில் எமக்­கொரு கேள்வி எழுந்­துள்­ளது.

ஏனெனில் இவர்­க­ளுக்கு விடு­த­லையை பெற்­றுத்­தர வேண்டும் என ஜனா­தி­பதி, பிர­தமர், சம்­பந்­தப்­பட்ட அமைச்­சர்கள் மற்றும் அற்­றோனி ஜெனரலிடம் கோரிக்­கை­வி­டுத்­தி­ருந்தோம். அச்­ச­ம­யத்தில் கைதிகள் விடு­தலை தொடர்­பாக சுமு­க­மான மகிழ்ச்­சி­யான பதிலை கடந்த 7ஆம் திக­திக்கு முன்னர் தரு­வ­தாக கூறி­யி­ருந்­தார்கள். ஆனால் கூறி­யது போன்று தற்­போது நடை­பெ­ற­வில்லை.

ஆகவே, இவர்கள் எவ்­வா­றான நட­வ­டிக்­கையை எடுக்கப் போகி­றார்கள் என்­பது மயக்­க­மா­கவே உள்­ளது. அத்­துடன் எதற்­காக அரசு இவ்­வ­ளவு தாமதம் என்றும் எமக்கு புரி­ய­வில்லை. இன­ரீ­தி­யான கார­ணத்­திற்­காகவா அல்­லது வேறு ஏதா­வது கார­ண­மா­கவா இந்த தாமதம் என்று எனக்குத் தெரி­ய­வில்லை.

இவ் விட­யத்தில் சட்­ட­ரீ­தி­யான கார­ணங்கள் இருக்­கின்­றன என்றால் இத்­தனை வரு­டங்­க­ளாக வழக்­கொன்றும் பதி­யாமல் இருக்கும் இவர்­க­ளுக்கு எப்­போதோ பிணை அளித்­தி­ருக்­க­வேண்டும். அவ்­வாறு செய்­யாது விட்­டு­விட்டு தற்­போது பிணை அளிப்­ப­தாக கூறு­வதை நாங்கள் ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. ஏனெனில் இது­வரை வழக்குத் தொடர முடி­யாத ஒரு­வ­ருக்கு இனி எவ்­வாறு வழக்குத் தொட­ரப்­போ­கி­றார்கள்.

அத்­துடன் அத்­த­கைய வழக்­கிற்கு சாட்­சி­யங்கள் இப்­போது இருக்­குமா என்­பது கேள்­விக்­கு­றி­யாகும். இந்­நி­லையில் இப்­ப­டிப்­பட்­ட­வர்­களை பொது மன்­னிப்பில் விடு­வதில் எந்­த­வி­த­மான சிக்­கலும் இருக்­கப்­போ­வ­தில்லை. சில­ருக்கு எதி­ராக வழக்­குகள் பதி­யப்­பட்­டுள்­ள­தாக கூறு­கி­றார்கள். அப்­ப­டி­யாயின் எதற்­காக வீண் தாமதம். அவ் வழக்­கு­களை விரை­வாக முடிப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கலாம்.

இவ்­வி­ட­யத்தில் நாம் ஒன்றை நினைவில் வைத்­துக்­கொள்ள வேண்டும். அதா­வது அர­சியல் கைதிகள் எனும்­போது ஜே.வி.பி.யி­ன­ருக்கு எதி­ராக பல­வி­த­மான குறிப்­பாக தமிழ் இளைஞர், யுவ­தி­க­ளுக்கு இருப்­ப­தை­வி­டவும் மேலான குற்­றச்­சாட்­டுகள் அவர்கள் மீதும் இருந்­த­தாக கரு­து­கிறேன்.

அப்­படி இருந்தும் அவர்­க­ளுக்கு பொது மன்­னிப்பை இலங்கை அர­சாங்கம் வழங்­கி­யி­ருந்­தது. அதே­போல சுமார் 10 ஆயி­ரத்­துக்கும் மேற்­பட்ட விடு­தலைப் புலி­க­ள் பொது மன்­னிப்பு அளித்து விடு­தலை ­செய்­யப்­பட்­டுள்­ளார்கள். ஆகவே, இவ்­வா­றெல்லாம் நாட்டில் இருக்­கும்­போது வெறு­மனே 248 தமிழ் அர­சியல் கைதி­களை விடு­தலை செய்­வதில் தற்­போ­தைய அர­சாங்கம் எதற்­காக பின்­நிற்கி­றது.

இது எமக்கு பல­வி­த­மான எண்­ணங்­க­ளையும் கருத்­துக்­க­ளையும் உண்­டாக்­கு­கின்­றது. எது எவ்­வா­றாக இருந்­தாலும் அவர்கள் குற்றம் செய்­தார்களா இல்­லையா என்பதற்கு அப்பால் அவர்கள் நீண்டகாலம் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.

இதனால் அவர் களது வயதும் அதிகமாகிவிட்டது. அத் துடன் அவர்களது குடும்பங்கள் பல் வேறுபட்ட துன்பங்களை சந்தித்து வரு கின்றன. எனவே தீபாவளியை முன்னிட்டு இன நல்லிணக்கதை ஏற்படுத்தும் வகை யில் அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யப்பட வேண்டும் என நான் கருதுகிறேன் என்றார்.