என் இதயத்தில் இருந்து ரத்தம் வழிகிறது, நடிகர் விவேக் வேதனை
சென்னையில் வசிக்கும் என் சக மக்களின் நிலையைக் கண்டு என்னுடைய இதயத்தில் இருந்து ரத்தம் வழிகிறது என்று நடிகர் விவேக் தெரிவித்திருக்கிறார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து நேற்று முந்தினம் இரவு முதலே விடாது மழை பெய்து வருகிறது. இதனால் தமிழகமெங்கும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். குறிப்பாக சென்னையில் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல தொண்டு நிறுவனங்கள் மட்டுமின்றி வசதி படைத்த மனிதர்களும் தங்களால் ஆன உதவியை செய்துவருகிறார்கள்.
இந்நிலையில் நடிகர் விவேக் தனது டுவிட்டர் பக்கத்தில் சென்னை மக்களுக்கு ஆறுதல் கூறியுள்ளார்.








