Breaking News

அரசியலமைப்பு திருத்தம் – மக்களின் கருத்தறிய 24 பேர் கொண்ட குழு நியமனம்

அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக பொதுமக்களின் கருத்துக்களை அறிந்து கொள்வதற்கு, அரசியல் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகளைக் கொண்ட குழுவொன்றை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நியமித்துள்ளார்.

24 பேர் கொண்ட இந்தக் குழுவை அமைப்பதற்கான  பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அமைச்சரவைப் பத்திரத்துக்கு  அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.சட்டவாளர் லால் விஜேநாயக்கவைத் தலைவராக கொண்டு இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவில், பைசர் முஸ்தபா, பேராசிரியர் காமினி சமரநாயக்க, கலாநிதி நவரத்ன பண்டார, பேராசிரியர் எம்.எல்.ஏ.காதர், என்.செல்வக்குமரன், எஸ்.தவராஜா, குசான் டி அல்விஸ், ஹரினி அமரசூரிய, கலாநிதி குமுது குசும் குமார, சட்டவாளர் சுனில் ஜெயரத்ன, கலாநிதி உபுல் அபேரத்ன, தேமிய ஹுருள்ளே, வின்சன் பதிராஜ, எஸ்.விஜேசந்திரன், சட்டவாளர் எம்.வை.எம். பாயிஸ், நதிகா தமயந்தி, சட்டவாளர் காந்தி ரணசிங்க, எஸ்.சி.சி.இலங்ககோன், சமரசிறி ஹப்புஆராய்ச்சி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்தக் குழு பொதுமக்களிடம் இருந்து, வாய்மூல மற்றும் எழுத்துமூலமான கருத்துக்களைக் கேட்டறியும். இதன் பின்னர், இந்தக் குழு ஆராய்ந்து, அரசியலமைப்பு திருத்தத்துக்கான அமைச்சரவை உபகுழுவிடம் பரிந்துரைகளை முன்வைக்கும்.