Breaking News

இலங்கையுடன் சுதந்திர வர்த்தக உடன்பாடு – அடுத்த ஆண்டில் பேச்சு நடத்தவுள்ளது சீனா

சுதந்திர வர்த்தக உடன்பாடு செய்து கொள்வது தொடர்பாக இலங்கை அரசாங்கத்துடன் அடுத்த ஆண்டு பேச்சு நடத்தப்படும் என்று சீன அரசாங்கம் அறிவித்துள்ளது.

சீனாவின் சின்ஹூவா செய்தி நிறுவனத்திடம், சீன வர்த்தக அமைச்சர் கோ ஹுசெங் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

”அடுத்த ஆண்டில் தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளுடன் விரிவான பிராந்திய பொருளாதாரக் கூட்டு உடன்பாட்டைச் செய்து கொள்வது குறித்தும், இலங்கை மற்றும் மாலைதீவுடன் சுதந்திர வர்த்தக உடன்பாடு செய்து கொள்வது குறித்தும், பூகோள பங்காளர்களுடன் வலுவான வர்த்தக முதலீட்டு உறவுகளை கட்டியெடுத்துவதற்கும் பேச்சுக்கள் நடத்தப்படும்.

பூகோள சந்தையில், விற்பனை வழிகளைக் கையாள வசதியாக, சீன நிறுவனங்கள் வெளிநாடுகளில் முதலீடு செய்வதற்கு ஊக்கம் அளிக்கப்படும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.