Breaking News

பட்ஜெட் இறுதி வாக்கெடுபை பகிஷ்கரிப்பு! சரியான சந்தர்ப்பத்தில் பதவியை உதறுவேன் - செல்வம் அதிரடி

தமிழ் அர­சியல் கைதி­களின் பிரச்­சி­னைக்கு தீர்வு வழங்­கு­ம் வ­ரையில் வர­வு­செ­ல­வுத்­திட்­டத்தின் மூன்­றா­வது வாசிப்­பு ­மீதான வாக்­கெ­டுப்பில் எமது பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் கலந்­து­கொள்­ளப்­போ­வ­தில்­லை­ என்று தீர்­மா­னித்­துள்­ள­தாக தமி­ழீழ விடு­தலை இயக்க தலை­வரும் பாரா­ளு­மன்ற குழுக்­களின் பிர­தித்­த­லை­வருமான செல்வம் அடைக்­க­ல­நாதன் எம்.பி தெரிவித்தார்.

மட்­டக்­க­ளப்பில் நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை நடை­பெற்ற தமி­ழீழ விடு­தலை இயக்­கத்தின் (ரெலோ) மட்­டக்­க­ளப்பு மாவட்ட பொதுக்­கூட்டம் கட்சி அலு­வ­ல­கத்தில் நடை­பெற்­றது. அத­னைத்­தொ­டர்ந்து விசேட ஊடக­வி­ய­லாளர் சந்­திப்பு தமி­ழீழ விடு­தலை இயக்க அலு­வ­ல­கத்தில் நடை­பெற்­றது.

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

இலங்கை அர­சாங்­கத்தின் இரண்­டா­வது வர­வு­செ­ல­வு­திட்­டத்­திற்கு தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு ஆத­ர­வ­ளித்­தது. அவர்­க­ளுக்கு ஒரு சந்­தர்ப்­பத்­தினை வழங்­கு­வ­தற்கே அந்த ஆத­ர­வினை வழங்­கினோம். அவர்கள் எத­னையும் தமி­ழர்­க­ளுக்கு வழங்­கமாட்­டார்கள் என்ற நிலை­வ­ரும்­போது சர்­வ­தேச சமூ­கத்­திடம் நியா­ய­மான கோரிக்­கை­யினை முறை­யிடும் நிலை­யினை ஏற்­ப­டுத்­த­வேண்டும் என்­ப­தற்­கா­கவே அதனை ஆத­ரித்தோம்.

ஆனால் தற்­போது தமி­ழீழ விடு­தலை இயக்கம் சிறைக்­கை­தி­களின் விடு­தலை தொடர்பில் நட­வ­டிக்­கை­யெ­டுக்­கப்­ப­டா­விட்டால் மூன்­றா­வது வாசிப்பில் நடு­நி­லை­வ­கிக்­க­வேண்டும் என்ற தீர்­மா­னத்­தினை பொதுக்­குழு கூட்­டத்தில் எடுத்­துள்ளோம்.

இது தொடர்பில் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் தலை­வ­ரி­டமும் கூறி­யுள்ளோம். அதன்­ கா­ர­ண­மாக வர­வு­செ­லவு திட்­டத்தின் எதிர்­வரும் மூன்­றா­வது வாசிப்பில் தமி­ழீழ விடு­தலை இயக்கம் (ரெலோ) வாக்­க­ளிக்­காது என்­பதை தெரிவித்­துக்­கொள்­கின் றேன். இன்று இரண்டு அர­சியல் கைதிகள் உண்­ணா­வி­ரத போராட்­டத்­தினை மேற்­கொண்­டு­வ­ரு­கின்­றனர். இதில் ஒருவர் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் ஒருவர் சாட்சி சொல்ல வரா­ததன் கார­ண­மாக ஆறு வரு­ட­மாக தடுத்­து­வைக்­கப்­பட்­டுள்ளார்.

சரி­யான சந்­தர்ப்பம் வரும்­போது எனது பாரா­ளு­மன்ற பிர­திக்­கு­ழுக்கள் தலைவர் பத­வியை நான் உத­றி­வி­டுவேன். அர­சாங்­கத்­திற்கு சந்­தர்ப்­பங்­களை நாங்கள் முறை­யாக வழங்­க­வேண்டும். அந்த வகையில் நாங்கள் நல்­லெண்ண சமிக்­ஞையை வழங்­கி­யுள் ளோம்.

இலங்கை அர­சாங்கம் ஒரு­வ­ருட காலத்­திற்குள் அதா­வது 2016ஆம் ஆண்­டிற்குள் தீர்வு வழங்­கப்­படும் என தெரிவிக்­கப்­பட்­டுள்­ளது. அதனை எமது தலைவர் சம்­பந்­தனும் தெரி வித்­துள்ளார். எங்­க­ளைப்­பொ­றுத்­த­வ­ரையில் சர்­வ­தே­சத்தின் வருகை இன்று அதி­க­ரித்­துள்­ளது.எங்­க­ளது மக்­களை நாங்­களே ஆளக்­கூ­டிய வகையில் தீர்­வுத்­திட்­டத்­தினை வழங்­கு­வ­தாக இருந்தால் இலங்கை அர­சாங்­கத்­திற்கு சந்­தர்ப்பம் வழங்­கப்­ப­ட­வேண்டும்.

அதனை இலங்கை அர­சாங்கம் மறுக்கும் நிலையில் அத­னைக்­காட்டி இலங்கை அர­சாங்கம் பழைய நிலை­யி­லேயே உள்­ளது என்­பதை சர்­வ­தே­சத்­திடம் காட்டி எமக்­கான நியா­யத்­தினை கோர­மு­டியும் என்றார்.