Breaking News

நல்லிணக்கம் ஏற்பட வட,கிழக்கில் இருந்து இராணுவத்தை அகற்ற வேண்டும்: ஆஸி செனட்டர்

தமிழர் செறிந்து வாழும் வடக்கு கிழக்கு மாகாணங்களிலிருந்த இலங்கை அரசாங்கம், இராணுவத்தினரை அகற்றிக் கொள்ள வேண்டும் என அவுஸ்திரேலிய செனட்டர் கோரிக்கை விடுத்துள்ளார்.

நல்லாட்சி அரசாங்கம் குறிப்பிடும் உண்மையான நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டுமாயின் வடக்கு கிழக்கில் இராணுவ பிரசன்னத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டுமெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கடந்த வாரம் அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற மாவீர தின கொண்டாட்டங்களில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறான கருத்துககைளத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், உயர்தர மாணவன் செந்தூரனின் தற்கொலைக் குறித்தும் பேசிய அவர், சுதந்திரம் மற்றும் நீதிக்காக எந்தவொரு தமிழரும் இனி உயிர்த்தியாகம்செய்யக் கூடாது எனவும் வலியுறுத்தியுள்ளார்.

இவ்வாறான துயரச் சம்பவங்கள் மீளவும் இடம்பெறுவதனை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியமானது எனச் சுட்டிக்காட்டிய அவர், இதற்காக தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.

அதனடிப்படையில், பயங்கரவாதத் தடைச் சட்டம் ரத்து செய்யப்பட வேண்டுமெனவும், தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.