Breaking News

வடக்கில் ஒரு மருத்துவர் கூட இல்லாத 29 மருத்துவமனைகள்!

தமது அதிகாரத்திற்குட்பட்ட பிரதேசத்தில் ஒரு மருத்துவர் கூட இல்லாத 29 மருத்துவமனைகள் இருப்பதாக வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பி.பி.சி. சிங்களச் சேவையுடனான நேர்காணலின்போது வடக்கு மாகாண சுகாதார அமைச்சர். பி.சத்யலிங்கம் இதனைத் தெரிவித்துள்ளார்.அத்துடன், வடக்கு மாகாணத்திற்கு மொத்தமாக 230 மருத்துவர்களுக்கான பற்றாக்குறை நிலவுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இதனைத்தவிர வடக்கு மாகாணத்திலுள்ள மருத்துவமனைகளில் பாரிய தாதியர் பற்றாக்குறை நிலவுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.