அவன்ட் காட் நிறுவன தலைவரை கைதுசெய்ய இன்டர்போலின் உதவி நாடப்படும்
அவன்ட் கார்ட் ஆயுத கப்பல் தொடர்பான விசாரணைகளுக்கு சமூகமளிக்காமல் இருந்தால், நிறுவனத்தின் தலைவர் நிசங்க சேனாதிபதியை கைது செய்ய இன்டர்போலின் உதவி நாடப்படும் என்று இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்த தகவலினை அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.குறித்த கப்பல் தொடர்பில் தற்போது பாரிய ஊழல்களுக்கு எதிரான ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைகளை முன்நடத்தி வருகிறது.
எனினும் வெளிநாட்டில் மருத்துவ சிகிச்சை ஒன்றை பெறுவதன் காரணமாக சேனாதிபதிக்கு இந்த விசாரணையில் பங்கேற்க முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையிலேயே அவர் விசாரணையில் இருந்து தப்ப முயற்சித்தால் சர்வதேச பொலிஸின் உதவி நாடப்படும் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
இன்னும், அவன்ட் காட் நிறுவனத்துடன் இலங்கை அரசாங்கம் உடன்படிக்கை எதிலும் கைச்சாத்திடவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார்.








