Breaking News

இனப்பிரச்சினைக்கு தீர்வுகாணும்வகையில் புதிய அரசியல் அமைப்பு அமையும் - ராஜித கூறுகிறார்

போர்க்­குற்ற விசா­ர­ணை கள் மாத்­தி­ரமே தமிழ் மக்­களின் பிரச்­சினை என்றால் அதற்­கான தீர்வு பெற்­றுக்­கொ­டுப்­பது கடி­ன­மான ஒன்­றல்ல. ஆனால் அதையும் தாண்டி தமிழ் மக்­களின் உரி­மை­களை வென்­று­கொ­டுக்க வேண்டும் என்றே அர­சாங்கம் முயற்­சிக்­கின்­றது என அமைச்­ச­ரவை பேச்­சா­ளரும் சுகா­தார அமைச்­ச­ரு­மான ராஜித சேனா­ரத்ன தெரி­வித்தார்.

சர்­வ­தேச தேவைக்­கா­கவும் புலம்­பெயர் அமைப்­பு­களின் குறு­கிய நோக்­கத்தை நிறை­வேற்­று­வ­தற்­கா­கவும் தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­களை திசை திருப்ப வேண்டாம் எனவும் அவர் குறிப்­பிட்டார்.

தமிழ் மக்­களின் பிரச்­சி­னைகள் முழு­மை­யாக தீரும் வகையில் புதிய அர­சியல் அமைப்பு அமைய வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு தெரி­வித்­துள்ள நிலையில் அர­சியல் அமைப்பின் மூல­மாக நீண்­ட­கால பிரச்­சி­னை­களை தீர்க்க அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுக்­குமா என ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்கே அமைச்சர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறு­கையில்,

தமிழ் மக்­களின் நீண்­ட­கால பிரச்­சி­னைகள் என்­ன­வென்­பது எமக்கு நன்­றா­கவே தெரியும். அவர்­களின் சொந்த இடங்­களை அப­க­ரித்­தமை, சட்­ட­வி­ரோ­த­மாக அல்­லது அனா­வ­சி­ய­மாக கைது செய்­தமை, அவர்­களின் உரி­மை­களை பெற்­றுக்­கொள்­வதில் உள்ள தடைகள் என்­ப­னவே தமிழ் மக்கள் நீண்­ட­கா­ல­மாக அனு­ப­வித்து வரும் பிரச்­சி­னை­க­ளாகும்.

இந்த விட­யங்­களை கடந்த காலத்தில் அர­சாங்கம் சரி­யாக செய்து கொடுக்­காத கார­ணத்­தினால் தான் சர்­வ­தேச தரப்பின் மீது நம்­பிக்கை கொண்டு அவர்கள் செயற்­பட்டு வரு­கின்­றனர். இதில் குறை­கூறும் வகையில் எதுவும் இல்லை.

ஆனால் தமிழ் மக்­களை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் அர­சியல் கட்­சிகள் தமது பாதையை சரி­யாக தெரி­வு­செ­யா­த­மையே பிச்­சி­னை­யாக உள்­ளது. தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­களை அர­சாங்­கத்­துடன் பேசி அவர்­களின் சலு­கை­களை வென்­று­கொள்ள வேண்டும். அதற்கு அர­சாங்கம் தயா­ரா­கவே உள்­ளது. அதேபோல் அடிப்­படை பிரச்­சி­னை­களை பூர்த்தி செய்து வடக்கு கிழக்கு பகு­தி­க­ளையும் அபி­வி­ருத்தி அடையச் செய்­ய­வேண்டும். அதை விடுத்து போர்க்­குற்றம் என்ற ஒன்றை மாத்­திரம் பிடித்­துக்­கொண்டு சர்­வ­தே­சத்தின் பின்னால் பய­ணிப்­பதால் எந்த நன்­மை­களும் கிடைக்கப் போவ­தில்லை.

அதையும் தாண்டி போர்க்­குற்ற விசா­ர­ணைகள் மட்­டுமே தமிழ் மக்­களின் பிரச்­சினை என்றால் அதற்கு தீர்வு விரைவில் கிடைத்­து­விடும். இறு­திக்­கட்ட யுத்­தத்தில் இடம்­பெற்ற போர்க்­குற்ற விசா­ர­ணைகள் தொடர்பில் உண்­மை­களை கண்­ட­றியும் பொறி­மு­றைகள் அனைத்­தையும் நாம் முன்­னெ­டுத்து வரு­கின்றோம். அதேபோல் காணா­மல்­போனோர் தொடர்பில் விசா­ர­ணை­களும் தீவி­ர­மாக முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றது.

அதையும் தாண்டி உள்­ளக விசா­ர­ணைகள் மற்றும் சர்­வ­தேச ஒத்­து­ழைப்­புடன் கூடிய ஆலோ­ச­னை­களை பெற்று அடுத்­த­கட்ட விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்­கவும் அர­சாங்கம் தயா­ரா­கிக்­கொண்­டி­ருக்­கின்­றது.

அதேபோல் போர்க்­குற்ற விசா­ர­ணைகள் தொடர்பில் நீதி­மன்ற சுயா­தீன செயற்­பா­டு­க­ளுக்­கென விசேட சட்­ட­மூலம் ஒன்­றையும் அடுத்த ஆண்டு நடுப்­ப­கு­திக்குள் கொண்­டு­வர தீர்­மா­னித்­துள்ளோம். ஆகவே போர்க்­குற்ற விசா­ர­ணைகள் தொடர்பில் அர­சாங்கம் தெளி­வாக தமது நகர்­வு­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றது.

அதேபோல் அர­சியல் பிரச்­சினை மற்றும் இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்வு காணும் வகையில் புதிய அர­சியல் அமைப்பு அமையும். நீண்­ட­கால பிரச்­சி­னை­களை தீர்க்க வேண்டும் என்ற நிலைப்­பாட்டில் நாம் உள்ளோம். ஆகவே அடுத்த வருட ஆரம்பம் நாட்டு மக்­க­ளுக்கு நன்­மை­ய­ளிக்கும் வகையில் அமையும் என்­பது சந்­தேகம் இல்லை.

மக்­களின் அடிப்­படை பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு பெற்­று­க­கொள்­ளப்­பட்ட பின்னர் படிப்­ப­டி­யாக ஏனைய பிரச்­சி­னை­களை தீக்க முடியும். ஆகவே அதற்­கேற்றால் போல் தமிழ் அர­சியல் கட்சிகளும் தமது ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.

அதை விடுத்து சர்வதேச தேவைக்காகவும், புலம்பெயர் அமைப்புகளின் குறுகிய நோக்கத்தை நடைமுறைப்படுத்தவும் எவரும் நாட்டுக்குள் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம். வெறுமனே ஒருசில காரணங்களை முக்கியத்துவப்படுத்தி ,தமிழ் மக்களையும் திசைதிருப்பி வென்றெடுத்த ஜனநாயகத்தை குழப்ப வேண்டாம் என குறிப்பிட்டார்.