Breaking News

மாண­வர்­க­ளுக்­கான இல­வச சீருடை வவுச்­சர்கள் தொடர்­பான குற்­றச்­சாட்டுக்கள்

பாட­சாலை மாண­வர்­க­ளுக்கு இல­வச சீரு­டைத்­து­ணி­க­ளுக்கு பதி­லாக அர­சாங்­கத்­தினால் இம்­முறை வழங்­கப்­பட்ட பண வவுச்­சர்கள் தொடர்­பாக
பல்­வேறு குற்­றச்­சாட்­டுக்­களை பெற்­றோர், ஆசிரியர்கள் தெரி­விக்­கின்­றனர்.

பண வவுச்­சர்­களைப் பெற்­றுக்­கொள்­வ­தற்­காக ஆரம்ப வகுப்பு (தரம் 1 முதல் 5 வரை) மாண­வர்­களின் பெற்­றோர் பாட­சா­லைக்கு வர­வேண்டும் என்று அறி­வு­றுத்தல் வழங்­கப்­பட்­டது. அதன் கார­ண­மாக தாங்கள் தொழிலுக்கு செல்­லாமல் சீருடைத்­து­ணியை பெற்­றுக்­கொள்­வ­தற்­காக பாட­சா­லை­களுக்குச் சென்று நீண்ட வரி­சையில் காத்து நின்று பண வவுச்­சர்­களை பெற வேண்­டி­யி­ருந்த­தா ­கவும், 420 ரூபா முதல் 720 ரூபா வரை­யான பெறு­ம­தி­யு­டைய பண வவுச்­சர்­களைப் பெற்­றுக்­கொள்­வ­தற்­காக தொழி­லுக்குச் செல்­லாமல் தமது நாளாந்த வரு­மா­னத்தை இழக்க வேண்டி ஏற்­பட்­ட­தா­கவும் சில பெற்­றோர் குற்­றச்­சாட்டு தெரி­விக்­கின்­றனர்.

இது­தொ­டர்­பாக பெற்­றோர் பலர் மேலும் தெரி­விக்­கையில்,

முன்னர் வழங்­கப்­பட்ட சீரு­டைத்­துணி வழங்கும் முறையே பெற்­றோருக்கு இல­குவா­னது. அன்­றாடம் தொழில் செய்து சம்­பா­திக்கும் பெற்­றோர் அதன் மூல­மாக பாதிக்­கப்­ப­டு­கின்­றனர். காரணம் தொழி­லுக்குச் செல்­லாமல் பண வவுச்­சர்­களைப் பெற பாட­சா­லைக்கு வர­வேண்­டி­யுள்­ளது. இதற்­காக போக்­கு­வ­ரத்­துக்கும் பணத்தைச் செல­விட வேண்­டி­யுள்­ளது. பண வவுச்­சர்­களைப் பெற்ற பின்னர் மீண்டும் துணி­களை வாங்க பணத்தைச் செல­விட்டு கடை­க­ளுக்குச் சென்று துணி­களை வாங்க வேண்டும். இதன் கார­ண­மாக துணி­க­ளுக்கு பதி­லாக பண வவுச்சர் பெறு­வது எமக்கு நட்­ட­மாவே அமைந்­துள்­ளது.

தொழி­லுக்கு சென்றால் எமக்கு கிடைக்கும் நாளாந்த வரு­மானம் பண வவுச்­சரை விட இரண்டு மடங்­காகும். அத்­துடன் நீர்­கொ­ழும்பு நகரில் உள்ள சில பாட­சா­லை­களில் உயர்­தர வகுப்பு மாண­வர்கள் சில­ருக்கு பண வவுச்­சர்கள் வழங்­கப்­ப­ட­வில்லை. பாட­சா­லை­க­ளுக்கு உரிய தினத்தில் போதிய அளவு வவுச்­சர்கள் கிடைக்­கா­மையே இதற்­கான கார­ண­மாகும் என்று தெரி­வி­வித்­தனர்.

இதே­வேளை ஆசி­ரி­யர்கள் சிலர் கருத்து தெரி­விக்­கையில்,

முன்­னரைப் போன்று சீரு­டைத்­து­ணி­களை நேர­டி­யாக வழங்கும் முறையே இல­கு­வா­னது. வருட இறு­தியில் விடு­முறை வழங்கும் காலப்­ப­கு­தியில் பாடசாலைகளில் ஒளி விழா, பரிசளிப்பு விழா ஆசிரியர் - பெற்றோர் சந்திப்பு என ஆசிரியர்களுக்கு பல்வேறு பணிகள் உள்ளன. இந்த நிலையில் திடீரென பண வவுச்சர்களை வழங்க பணிக்கப்பட்டமை பெரும் அசௌகரியங்களை ஏற்படுத்தியது என்றனர்.