போராட்டம் வெடிக்கும் – தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை
கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் நாடு தழுவிய ரீதியில் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுமென அரசாங்கத்திற்கு தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
எதிர்வரும் ஒரு வார காலத்திற்குள் தனியார் துறையினருக்கான சம்பள அதிகரிப்பு மற்றும் அரச சேவையாளர்களுக்கான ஓய்வூதிய திட்டம் ஆகிய கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் இவ்வாறான தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டத்திற்கு ஆதரவாக தற்போது கையொப்பம் திரட்டும் நடவடிக்கையும் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.