தமிழரின் அபிலாஷைகளை நிறைவேற்றுவது வரலாற்றின் கட்டாயம் - காந்தியின் பேரன்
மிதவாத தமிழ்த் தலைவர்கள் முறைவழியானவர்கள். அவர்களின் புறக்கணிப்பே பாரிய போரொன்றுக்கு வழிவகுத்தது. பொன்னம்பலங்கள், செல்வநாயகங்கள், திருச்செல்வங்கள் சகிப்புணர்வும் தொலைநோக்கும் கொண்ட தலைவர்கள். அவர்கள் வெறுத்துத் தள்ளப்படாவிடின் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தேவை ஏற்பட்டிராது.இலங்கைத் தமிழரின் அபிலாஷைகளை நிறைவேற்றுவது விருப்புரிமையல்ல. வரலாற்றின் கட்டாயம் என்று மகாத்மா காந்தியின் பேரனும் இலங்கைக்கான இந்திய முன்னாள் தூதுவருமான கோபால கிருஷ்ண காந்தி தெரிவித்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்று ஓராண்டு பூர்த்தியை முன்னிட்டு கொழும்பில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற நிகழ்வில், பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
தமிழில் அரிசி அளக்கும் சிறிய அளவையான ஆழாக்குக் குறித்த வழக்கு உண்டு. அது தனது உருளை வடிவுக்கு கிழக்கு மேற்குள்ளது என்று கற்பனை செய்து புன்னகை செய்கின்றது. சிறிய ஆழாக்குக்கு கிழக்கு, மேற்கு இருக்கின்றதோ இல்லையோ தீவுகளுக்கு சுவையுண்டு. இலங்கைக்கும் அவை உண்டு. இடங்கள் வழிகள் சார்பானவையே திசைகாட்டிகள். இன்று இலங்கை தனது செல்வழியை உணர்ந்துள்ளது. மக்கள் அதற்குக் காட்டிய வழியில் அது நிதானமாக முன்னேறுகின்றது.
இலங்கையின் பல்வட்ட வடிவிலான தேசிய ஒற்றுமை, அரசின் முதலாவது ஆண்டு நிறைவை ஒட்டி எனது மகிழ்வுடனான பாராட்டைத் தெரிவிக்கின்றேன். அதன் வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கிற்கும் எனது வளரும் பருவ காலத்தை அதன் அருள் நிழலில் கழித்த தலதா மாளிகை இலங்கும் மலையகத்துக்கும் எனது மகிழ்ச்சி மிக்க பாராட்டைத் தெரிவிக்கின்றேன்.
ஜனாதிபதி அவர்களே, உங்கள் நிறைவேற்றும் சுக்கான் பிரதமருடன் நீங்கள் தலைமை தாங்கும் அரசு, சகல திசைகளையும், மத்தியிலுள்ள புனித மையப்பகுதியையும் ஒன்றிணைத்துள்ளது. அதைவிட இன்னமும் அதிகமாக அது நிறைவேற்றியுள்ளது. அடையமுடியாதென ஒதுக்கிய ஒன்றைத் தொலைநோக்குடன் கூடிய முதிர்ந்த மக்களின் நல்லெண்ணத்தால் இயலுமென அது தெற்காசியாவுக்குக் காட்டியுள்ளது. மாண்புமிக்க சீமாட்டிகளே, சீமான்களே அதுதான் பயத்துக்குப் பதிலீடாக நம்பிக்கையையும் சந்தேகத்துக்குப் பதிலீடாக நம்பிக்கையையும் வைத்தமையாகும். பாரம்பரியமாக எதிர்த்துருவங்களாகவிருந்த ஐக்கிய தேசியக் கட்சியையும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியையும் மாமரத்தில் இளநீர் காய்ப்பது போல ஒன்று சேர்த்துள்ளனர். இது திருத்த முடியாத குறை கூறுபவர்கள் மட்டுமல்ல, அனுபவஸ்தர்களாலும் கவி விசித்திரமாகப் பார்க்கப்பட்டது. இதனால் பழிக்குப் பதிலாக நல்லிணக்கம். பிரிவிலிருந்து பேச்சுவார்த்தை போரிலிருந்து சமாதானம் சாவிலிருந்து வாழ்வு என்பன முகிழ்ந்தன. ஆப்கானிஸ்தானுக்கு அடுத்த படியாக "போரும் சமாதானமும்", "வாழ்வும் சாவும்" ஆகிய சொற்கூட்டங்கள் உண்மை வடிவெடுத்தது இலங்கையிலேயே, இந்நாட்டின் எண்ணற்ற மக்களை சாவில் உறையவைக்கும் கரத்தின் ஸ்பரிசத்தை உணர்த்தியது மட்டுமன்றி தங்கள் அவயங்களில் தலைகளைத் தாங்கியிருந்தார்கள். இப்போதும் இருக்கின்றார்கள். சிலர் ஆபத்தை விலைக்கு வாங்கும் பொதுவாழ்வில் உழல்கின்றனர். வேண்டுமென்றே இச் சொல்லை தான் பாவிக்கின்றேன்.
அவர்களது தீரத்துக்கும், கூர்ந்த மதிக்கும் நான் சலாம் செய்கின்றேன். இலங்கை மக்களுக்குக் கிட்டிய ஓய்வில் நானும் பங்கு கொள்கின்றேன். சென்ற வருடம் இலங்கை பயங்கரமான படுபாதாள விளிம்பில் தள்ளாடியது. அதன் மக்கள் தங்கள் தாயகத்தை விளிம்பிலிருந்து பின் தள்ளியுள்ளனர். அவர்கள் பரஸ்பர ஐயுறவிலிருந்து உயர்ந்து செல்லும் நம்பிக்கையின் பால் அதைக் கொண்டு வந்துள்ளனர்.
கூட்டுக்குள் சந்தர்ப்பவாதம் போன்று பழைமை வாய்ந்தவை. அரசியல் இணைப்புக்கள் தந்திரமானவை. இவ்வாறான இணைப்புக்கள் கணநேரத்தில் நொருங்கி முறிந்தது, தென்னாசியாவிற்குப் புதிதான ஒன்றல்ல. நம்பிக்கையென்னும் விடயத்தில் அவர்கள் மழலையர் பள்ளிகளிலேயே உள்ளனர். இலங்கை வீழ்த்தும் நடவடிக்கைகளுக்குப் பெயர்போனது. கை செய்வதை முகம் மறைக்கும் நடவடிக்கைகளும் இருந்தன. ஆனால், நம்ப முடியாத அளவில் ஒரு வருடத்திற்கு முன்பு தன்னலத்துடனான அகம்பாவத்தை வெட்டிச்சரிக்கும் செயல் இடம்பெற்றது.
இதைச் செய்தவர்கள் ஆபத்தை விலைக்கு வாங்கினர். இது நம்பிக்கையால் சாத்தியமானது. இந்த நம்பிக்கை வீணடிக்கப்பட்டிருந்தால் அரசியல் எதிர்காலத்தை விடப் பாரிய அளவிலான வீழ்ச்சி ஏற்பட்டிருக்கும். ஜனாதிபதி சிறிசேன, பிரதமர் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க இந்த இடர்மிகுந்த பாதையில் பயணிக்கும் போதும் தோல்விக்கும் தயாராகவே இருந்தனர். இன்று லசந்த விக்கிரமதுங்கவின் இறப்பை நினைவுகூரும் அஞ்சலிதினம். இதைவிட மேலதிகமாக நான் நினைவுபடுத்த வேண்டுமா.? இதில் இவர்கள் இறங்கும்போது எதிர்காலம் வலிமை மிக்கதா? கேலிக்கூத்தா? என வருமுன் நினைக்கவில்லை.
நம்பிக்கையை முன்னிறுத்தி இம் மூன்று தலைவர்களும் அவர்களைப் பின்பற்றுபவர்களும் சட்டங்களை மட்டும் மாற்றியமைத்தல் போதாது, உறவுகளைச் சீர்ப்படுத்துதல் வேண்டும் என்ற நோக்குடன் செயற்பட்டனர். நம்பிக்கை விசித்திரமானது. அது செயற்பட்டால் உயர்ந்ததாகவும் தோல்வி கண்டால் மூடத்தனமானதாகவும் கணிக்கப்படும். அரசியல்வாதி துடுப்பாட்ட வீரர் போன்றவர்.
இந்தியாவில் மூளை குறைந்த அரசியல்வாதியை காதுநீண்ட நாற்கால் பிராணிக்கு ஒப்பிடுவார்கள். நம்பிக்கையுடன் சோதனையில் இறங்கிய இவர்கள் இப்பிராணியுடன் ஒப்பிடப்படும் இடரை அலட்சியப்படுத்தினார்கள். தங்களுக்குள் சமமாக இந்த இடரை பகிர்ந்து கொண்டார்கள். அவர்கள் அவசரமாக துணிவுடன் செயற்பட்டார்கள். தெரியாத விதியின் கோலங்களுடன் மதியுடன் செயற்பட்டனர். நிறைவேற்று ஜனாதிபதி முறையை தூர எறிந்துவிட தங்களது நஷ்டத்துக்கு விதிகளை மாற்ற தங்களது சொந்தச் செல்வாக்கைத் தகர்க்க தேர்தலில் ஈடுபடுவோர்கள் எத்தனை பேர்? தங்களது எதிராளிகளின் விரோதத்தைப் பற்றிச் சிறிதளவேனும் கவலைப்படாதவர்கள் யாராவது இருக்கின்றார்களா? அவர்கள் முற்று முழுதாகச் சரியென நிரூபித்துள்ளனர்.
ஒருவருடத்துக்கு முன் தேசத்தின் புகழை உயர்ந்த சகல மொழி பேசுபவர்களும் சமயம் சார்ந்தவர்களும் ஒன்றிணைந்து செயற்பட்டனர். அதனால் தெளிவாக பிசிறில்லாமல் நம்பிக்கையைப் பலப்படுத்தினர். அவர்கள் குறுகிய மனப்பான்மையை இறுக்கிப்பிடித்து புறந்தள்ளிய பிறகு பார்க்கலாம் என்றனர். அவர்கள் சென்ற காலத்தை மறக்கவில்லை. ஆனால், அதிலுள்ள ஐயுறவை நீக்கினர். அவர்கள் பேதங்களை மறுக்கவில்லை. விட்டுவிலகலை வழக்கற்றுப் போகச் செய்தனர். முள்ளை முள்ளால் எடுக்க வேண்டுமென்பது விதி. முள்ளின் வேலை முடிந்தவுடன் புண்ணை ஆற்ற வேறோர் சிகிச்சை தேவைப்படும். இலங்கை மக்களை முரண்பாட்டு முள்ளை அல்லது நல்லிணக்க அறுவடையைத் தெரிவு செய்யும் படி விதி கேட்டது.
அவர்கள் நல்லிணக்க அறுவடையையே விரும்பித் தெரிந்தனர். தேர்தல் நுண்ணறிவிலிருந்து கிடைத்த நாகரிகத்தைக் கொண்டாடுகின்றனர். ஓராண்டு கால ஆட்சியில் தனியுரிமை தகர்ந்தது, அரசியல் காட்டம் அகன்றது. ஐயுறவு ஓடிமறைந்தது. பேராசை நிர்க்கதியானது இதுதான் இந்தியா உட்பட்ட முழுத் தெற்காசியாவிற்கான இலங்கையின் படிப்பினை. இளமையில் கல்வி சிலைமேல் எழுத்துப் போன்றது. அதனால் தான் பல தமிழ் மேற்கோள்களைப் பாவிக்கின்றேன்.
முள்ளை முள்ளால் எடுக்கவேண்டுமென்பது ஒரு தமிழ் முதுமொழி. நாளைக்கான பதில் என்ன? இன்று செய்வது தான் நாளை விளையும். ஓர் இந்தியன் அறிவுரை வழங்குவதை தனது பிறப்புரிமையாக பிறப்பின் கடமையாக, தனது அற இயக்கமாகக் கொள்கின்றான். எங்கும் அவன் எதையும் கேளாது அறிவுரை வழங்குவதில்லை. பின்னிற்பதில்லை. இங்கு சொல்வதை சில மாற்றமைவுகளுடன் இந்தியாவிலும் சொல்வேன். இலங்கை மக்கள் தங்கள் கடமையைப் பிரயோகித்துள்ளனர். பொருளாதாரத்தை சீர்செய்தல், தொழில் பிறப்பாக்கல், தங்கள் சந்தித்த குழறுபடிகளை களைந்து குடியரசை நிமிர்த்தல் போன்ற ஆயிரம் பிரச்சினைகளின் சவாலைத் தேசிய நல்லிணக்க அரசு எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இப்பிரச்சினைக்கு இவ் அரசு தனது மேலான கவனத்தைத் தரும்.
இருப்பினும் இக் குடியரசின் முதன்மை வரையறை செய்யும் அஸ்திவார முன்னுரிமை இத் தேசத்தில் உள்ள முக்கிய இனங்களுக்கிடையில் நம்பிக்கையை நிலைநிறுத்தி ஒன்றுபடுத்தலேயாகும். இது அரசின் அவர்கள் குறித்த மனப்பான்மையை நேர்மை நியாயத்துடன் பேணுவதன் மூலமே சாத்தியமாகும். பதவியிலுள்ள ஜனநாயகவாதிகள் பிரச்சினையொன்றை எதிர்நோக்க வேண்டியுள்ளது. அவர்கள் திடமானவர்களாக இருக்கலாம்.
ஆனால், கொடுமைக்காரர்களாக மாறுதல் கூடாது. பிழை செய்பவர்களை மேலும் பிழை செய்யத்தூண்டாமல் அவர்கள் விதிகளைப் பின்பற்றுதல் வேண்டும். பிழை செய்தவர்கள் தொடர்பாக அவர்கள் பெருந்தன்மை காட்டுதல் வேண்டும். ஆனால், பிரச்சினையைத் தீர்க்கவேண்டுமெனவே மக்கள் ஆணை வழங்கியுள்ளனர். நல்ல தலைவர், சாமர்த்தியமுள்ளவராகவும் இருப்பார். குறுகிய காலத்துக்கன்றி நீண்டகாலத்துக்கு இதுவேண்டும்.
தான் வாழும் குறுகிய காலத்தில் ஜனநாயகத்தின் எதிரி, ஜனநாயகத்தில் வன்முறையைக் காட்டுவோர், குடிமக்களின் சுதந்திரம் மனித உரிமைகள் என்பவற்றுக்கெதிரான செயல்களைச் செய்வார்கள். கொலை உட்பட பல குற்றங்களையும் செய்துவிட்டுத் தப்பிவிடுவார்கள்.
இந்த நல்லொழுங்கை கொண்டாட அழைக்கப்பட்டவர் முன்னைய அரசாங்கத்தையோ அல்லது அதன் தலைவரான மஹிந்த ராஜபக் ஷவையோ விமர்சிப்பது நல்லதல்ல. உலகின் மிகக் கொடிய பயங்கரவாதத்தை இல்லாது செய்த அவரைச் சரித்திரத்தின் ஏடுகள் மறவா. ஆனால், ஒரு பாவமுமறியாதவர்களின் படுகொலைகள் நிச்சயமாக நிந்தனைக்குட்பட்டவை. தந்தை பயங்கரவாதத்தைப் பரப்பியவர் என்பதற்காக மகனை உயிரிழக்கச் செய்வது நியாயத்துக்கப்பாற்பட்டது. சகோதரக் கொலைக்கான கசப்பான யுத்தம் இலங்கையில் முடிவடைந்த போதிலும் சமாதானம் ஓடி ஒழிந்தது. துவக்குகள் மௌனித்தன ஆனால் பேச்சுவார்த்தையும் பதுங்கியது.
வேலுப்பிள்ளை பிரபாகரன் சரித்திரமானார். ஆனால் அவரது இலக்கு சரித்திரமானதா? திரும்பவும் தனது தலையை நிமிர்த்துவதற்காக அது ஒளிந்துள்ளதா? குறிக்கோள்களைத் திட்டமாக்க, திட்டங்களை நடைமுறைப்படுத்த, நடைமுறைகளின் பணிப்பயன்களைப் பெறுதல் என்பன ஏமாற்றங்களையும் திகைப்புக்களையும் சந்திக்கவேண்டியுள்ளன. நடவடிக்கை சீர்செய்தலை உள்ளடக்குமாயின் அளப்பரிய அளவில் சகிப்புத்தன்மை வேண்டும். தீர்வைச் சாகடிக்கும் தொழில் முறையாளர் நிறையப்பேர் உள்ளனர்.
அவர்களது இலக்கு குழப்பத்தை விதைப்பதே. அவர்களது குறி சட்ட மீறுகைகள். நாகம் புடையனுடன் ஒன்று கலந்தால் விளைவு எதுவுமில்லை. ஆனால், பணம் அதிகாரத்துடன் சல்லாபிக்கும்போது வாய்திறக்க முடியாத நிலைமைகளே உருவாகும். அதிகாரப் பகிர்வைத் தவிர்க்க எந்தச் சக்திக்கும் இலங்கை இடங்கொடுக்காது. நட்ட ஈடு வழங்குபவர்களது திருப்தியல்ல பெற்றவர்களது திருப்தியே முக்கியம். இலங்கைத் தமிழரே இடறாத விதியின் ஏற்பை வெளிப்படுத்தவேண்டும்.
மிதவாத தமிழ்த் தலைவர்கள் முறைவழியானவர்கள். அவர்களின் புறக்கணிப்பே பாரிய போரொன்றுக்கு வழிவகுத்தது. பொன்னம்பலங்கள், செல்வநாயகங்கள், திருச்செல்வங்கள் சகிப்புணர்வும் தொலைநோக்கும் கொண்ட தலைவர்கள். அவர்கள் வெறுத்துத் தள்ளப்படாவிடின் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தேவை ஏற்பட்டிராது. பயங்கரவாதத்திலிருந்து தப்பிய தமிழ்த்தலைவர்களை நாங்கள் மறக்கக்கூடாது.
ஒன்றிணைந்த இலங்கைக்காகப் பாடுபட்ட சகல தமிழ்த்தலைவர்களும் பயங்கரவாதத்திலிருந்து தப்பியவர்களே. இது ஒரு அதிசயந்தான். அவர்களது தோற்றம் சகிப்புத்தன்மையின் திடகாத்திரத்தைப் பறைசாற்றுகின்றது. முன்னைய விசச் சூழல் திரும்பி வரக்கூடாது. இலங்கைத் தமிழரின் அபிலாஷைகளை நிறைவேற்றுவது விருப்புரிமையல்ல. வரலாற்றின் கட்டாயம். புலம்பெயர் தமிழர்களின் ஈழம் கோரிக்கையானது மனமார ஏற்றுக்கொள்ள முடியாது.
புதிய அரசியலமைப்பை ஏற்படுத்தும் முயற்சியில் இலங்கை கால் பதித்துள்ளது. பிரிபடாத ஒற்றையாட்சியில் சமஷ்டி சார் விடயங்களை உள்ளடக்கிய புதிய அரசியலமைப்பு இயற்றப்படுதல் வேண்டும். 1987இன் இந்திய - இலங்கை இணக்கப்பாட்டின் 13ஆவது திருத்தத்துடனான தீர்வு பெறுமதி மிக்கதாகும். இந்தியாவைப் போன்ற பெறுமதி மிக்க நண்பன் இல்லையென்பதால் இதுவே உசிதமான வழியாகும்.
மத்தி, மாநிலம் என்பவற்றுக்கிடையிலான அதிகாரப்பகிர்வு ஆணித்தரமான அவசியமாகும். இதில் யார் உள்ளடக்கப்படவேண்டும்? பெரும்பான்மையல்ல. பகுத்தறிதலே. ஆனால் அரசியல் நாகரிகம் கிட்டுகின்றது. சமிக்ஞைகள் முக்கியமானவை. மகாத்மாகாந்தி சுட்டிக்காட்டியதற்குப் பத்து வருடங்கள் முன்பே முகம்மது அலி ஜின்னாவுக்குப் பிரதமமந்திரியாகப் பதவியும், அம்பேத்கருக்குத் ராஷ்டிரபதி அல்லது உப ராஷ்ட்டிரபதிப் பதவி கிடைத்திருந்தால் இந்தியாவின் வரலாறு வேறாக இருந்திருக்கும். இலங்கையின் ஜனாதிபதியாகவோ அல்லது பிரதமராகவோ தமிழர் ஒருவர் இருந்திருந்தால் இலங்கை பாரிய இடுக்கண்களைச் சந்திக்க வேண்டியேற்பட்டிராது. ஒரு தெற்காசியனாக இலங்கைத் தமிழர் ஒருவர் நமோ நமோ மாதாத் தேசிய கீதம் கிடைக்கும்போது இத்தகைய பதவியொன்றைப் பெறுவதைப்பார்க்க அவாவுறுகின்றேன்.
நெல்சன் மண்டேலா தனது மந்திரிசபையில் அதிகளவிலான இந்தியன் தென்னாபிரிக்கர்களைச் சேர்ந்தபோது விசனமுற்றவர்களுக்கு அவர் சொன்ன பதில் "இது அவர்களது ஈடுபாட்டைப் பொறுத்தது" என்றார். இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இது ஒரு பாடமாக அமையும். “வானவில் தேசத்தின்" உருவாக்கத்துக்குப் பங்களிப்புச் செய்த அளவின் படி சிறுபான்மைப் பிரதி நிதித்துவம் அமைச்சரவையில் இருத்தல் வேண்டும். சிங்களம் பேசும் இலங்கைத் தமிழர்களது எண்ணிக்கை போல் தமிழ் பேசும் சிங்களவர்களது எண்ணிக்கை இல்லாதது ஏன்? கொல்வினின் "ஒரு மொழி இரு நாடுகள்", "ஒரு நாடு இரு மொழிகள்" என்ற கோட்பாட்டையும் என்.எம்.பெரேராவின் ஒரு மேலான இனம் என்றில்லை என்பதையும் விளங்கிக் கொள்ளாததேயாகும். நான் கறுப்பு இனவாதத்துக்கும் எதிரானவன் என்று மண்டேலா சொல்லியுள்ளார்.
ஒரு இலங்கைத் தமிழன் சிங்கள பேரினவாதத்துக்கு எதிரானவன் என்று பொருளுண்டு. அவர் தான் தமிழ்ப் பேரினவாதத்துக்கு எதிரானவன் என்று அவரால் சொல்ல முடியுமா? இலங்கைத் தமிழர்கள், மலைநாட்டவர்கள், முஸ்லிம்கள் ஆகியோரும் கவனிக்கப்பட வேண்டிய வர்களே. இலங்கையின் பாராளுமன்ற ஜனநாயகம் ஒரு நல்லாட்சியைத் தரும். இலங்கைத் தமிழர் பெரும்பான்மையென்பது நச்சுத்தன்மையானது என எண்ணுதல் தப்பாகும்.
சிறுபான்மையினர் நீதியை எதிர்பார்க்கும்போது மனித உரிமைகளை முன்னிலைப்படுத்த வேண்டும். அவர்கள் தங்கள் குறைவான எண்ணிக்கையை கண்டு தடுமாறக்கூடாது. இந்தியன் தலித்துக்கள் முஸ்லிம்கள் போல முழுமையானவர்களாக இலங்கைத் தமிழர்கள் தங்களைக் கருத வேண்டும். பயங்கரவாதத்துக்கூடாக ஈழ த்தை அடைவது பகற்கனவாகிவிட்டது. இந்நிலைமாறி பேச்சுவார்த்தை நிலை ஏற்பட்டது. எனது உரையை நிறைவு செய்யுமுன் ஒரு வினா எழுப்ப விரும்பு கின்றேன். கண்டம் என்றால் என்ன தீவு என்றால் என்ன? கண்டம் பெரிய தீவே. இலங்கையைச் சிறிய தீவாக ஒருவரும் எண்ணவேண்டாம்.
பல ஆண்டுகளாக முரண்பாடு நிறைந்த இலங்கை நம்பிக்கை நிறைந்த தீவாக மாறியுள்ளது. அது ஒரு நம்பிக்கைக் கண்டமாக மாற விதி வழி செய்துள்ளது என்றார்.








