இந்தியாவை பகைக்க நாம் தயாரில்லை. - மீன் பிடித்துறை அமைச்சர்
மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து, இந்திய மீனவர்களால் பாதிக்கப்பட்ட மீனவர்களுடன் சந்திப்பொன்றை நடத்தினார் இந்த சந்திப்பின்போதே இந்தியாவை பகைக்க நாம் தயாரில்லை என தெரிவித்தார்
அமைச்சர் இன்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டார். தனது விஜயத்தின் முதலாவது அம்சமாக நீரியல்வளத் திணைக்களத்திற்குச் சென்றார்.நீரியல்வள திணைக்கள அதிகாரிகள், கடற்தொழில் சமாசம், சம்மேளனம் மற்றும் கடற்தொழிலாளர்களை அமைச்சர் சந்தித்தார்.
இந்த சந்திப்பில் இந்திய இழுவைப்படகுகளால் பாதிக்கப்பட்டடோரும் கலந்துகொண்டிருந்ததோடு, அவர்களது பிரச்சினைகள் மற்றும் கோரிக்கைகளையும் அமைச்சர் கேட்டறிந்துகொண்டார்.
பிரதியமைச்சர் விஜயகலா மகேஷ்வரன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், வடமாகாண சபை உறுப்பினர் சுகிர்தன், நீரியல்வளத் திணைக்களப் பணிப்பாளர் ரமேஷ் கண்ணா ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர்.








