Breaking News

நியூஸிலாந்துக்கு இலக்கு 143

நியூஸிலாந்துக்கு எதிரான இரண்டாவதும் இறுதியுமான 20பதுக்கு இருபது போட்டியில் 143 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை இலங்கை நிர்ணயித்துள்ளது. 

நியூஸிலாந்துக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள இலங்கை முன்னதாக இடம்பெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் தோல்வியைத் தழுவி டெஸ்ட் தொடரை 2-0 என நலுவவிட்டது. 

இதனையடுத்து ஆரம்பமான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஒரு போட்டி (4வது போட்டி) கைவிடப்பட்ட நிலையில், மூன்று போட்டிகளில் நியூசிலாந்தும் ஒன்றில் இலங்கையும் வெற்றி பெற்றன. இதன்படி ஒருநாள் தொடரையும் 3-1 என நியூஸிலாந்து கைப்பற்றியுள்ளது. 

இந்தநிலையில் இரண்டு ஆட்டங்கள் கொண்ட இருபதுக்கு 20 போட்டியிலும் ஒன்றில் நியூஸிலாந்து வெற்றி பெற்றுள்ள நிலையில், இன்று ஆக்லாந்து - ஈடன் பார்க் மைதானத்தில், இரண்டாவது போட்டி ஆரம்பமானது. 

இதில் நாணய சுழற்சியில் வென்ற நியூஸிலாந்து முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. 

இதன்படி களமிறங்கிய இலங்கை அணி சார்பில் அதிரடியாக ஆடிய மெத்தியூஸ் 81 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார். 

ஏனைய வீரர்கள் சொற்ப ஓட்டங்களுடன் வௌியேற 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்த அந்த அணி 142 ஓட்டங்களை விளாசியுள்ளது.