சுயாட்சியுடன் கூடிய சமஸ்டி - தமிழ் மக்கள் பேரவையின் யோசனையில் தெரிவிப்பு
வடக்கு கிழக்கு மாகாணத்தில் உள்ள துறைமுகங்கள், விமான நிலையங்கள் வளங்கள், நிதியைக் கையாளும் அதிகாரங்கள் சமஸ்டி ஆட்சி முறைக்குள் வரவேண்டும் என நகல் யோசனையில் முன்மொழியப்பட்டுள்ளன.
புலம்பெயர் நாடுகளிலுள்ள 10 இலட்சம் தமிழர்களுக்கான விசா அதாவது பிரஜா உரிமை மீண்டும் வழங்கப்பட வேண்டும் என்றும் அதற்கான பொறுப்புரிமை வடக்கு கிழக்கை உள்ளடக்கிய சமஸ்டி அரசாங்கத்திடம் வரவேண்டும் என்றும் நகல் யோசனையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலம் பல அதிகாரப் பகிர்வுகள் குறிப்பாக தமிழர்களின் இறையாண்மை வலியுறுத்தப்பட்டுள்ளது இது தொடர்பாக எதிர்வரும் சனிக்கிழமை 30ஆம் திகதி தமிழ் மக்கள் பேரவை உறுப்பினர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டு அவர்களிடமிருந்து கருத்துக்கள் பெறப்படும் என்றும் எதிர்வரும் 31ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ்.பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் பொது மக்களுக்கான கலந்துரையாடல் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.








