Breaking News

ஊடகங்கள் வேட்டையில் ஈடுபடுவதற்கு இடமளிக்கப் போவதில்லை - சபையில் பிரதமர்

ஒரு நாட்டின் சட்­டத்தை நிலை நாட்­டு­வ­தானால் அது பொலிஸ், ஊடகம் மற்றும் நீதி்­துறை ஆகிய முத்­த­ரப்­புக்­களின் இணைந்த செயற்­பாட்டின் அடிப்­ப­டை­யி­லேயே சாத்­தியம் என பிரதனர் ரணில் விக்ரமசிங்க நேற்று பாராளுமன்றில் தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த பிரதமர்;

நாட்டில் சட்­டத்தை பொலி­ஸா­ரினால் மாத்­திரம் நிலை நிறுத்­து­விட முடி­யாது. பொலிஸ் துறையை இல்­லாது செய்­தது போன்றே நீதித்­துறை மற்றும் ஊட­கத்­துறை ஆகி­ய­வற்­றையும் மஹிந்த ரெஜிமன்ட் இல்­லாது செய்து விட்­டது.

இன்று ஊட­கங்கள் இன­வா­தத்தை பரப்­பு­வ­தற்கு செயற்­பட்டு வரு­கின்­றன. ஆங்­கில – சிங்­கள ஊட­கங்கள் இன­வா­தத்­துக்கு துணை­போ­கின்­றன. ஊட­க­வி­ய­லா­ளர்கள் பலர் இன­வா­தி­க­ளாக செயற்­பட்டு ஊட­கங்­களைப் பயன்­ப­டுத்தி வரு­கின்­றனர்.

எம்­பி­லிப்­பிட்­டிய சம்­பவம் தொடர்பில் பேசு­கின்ற , எழு­துகின்ற ஊட­கங்கள் “ஹோமா­கம சம்­பவம் பற்றி பேசு­கின்­ற­னவா, எழு­து­கின்­ற­னவா? எந்­த­வொரு ஆசி­ரிய தலை­யங்­கமும் ஹோமா­கம சம்­பவத் தொடர்பில் எழு­தி­யுள்­ளதா?

ஊட­க­வி­ய­லா­ளரை வெள்ளை வேனில் கடத்­து­வ­தற்கு குறித்த ஊட­கத்தின் ஆசி­ரி­யரே செயற்­பட்­டி­ருந்­தமை எமக்கு தெரி­யாமல் இல்லை.

இன்று இலத்­தி­ர­னியல் ஊட­கங்கள் அனைத்­துமே இன­வா­தத்தை தூண்டி செயற்­பட்டு வரு­கின்­றன. ஊட­கங்கள் வேட்­டை­யாடும் செயற்­பா­டு­களில் செயற்­பட்டு இன­வா­தத்­துக்கு துணை­போகக் கூடாது. ஊட­கங்கள் எந்த இடத்தில் நின்று செயற்­பட வேண்டும் என்­பதை தீர்­மா­னித்துக் கொள்ள வேண்டும்.

இதே­வேளை அபே­ராம விஹா­ரையில் நேற்று (நேற்று முன்­தினம்) இர­க­சி­யக்­கூட்டம் ஒன்று இடம்­பெற்­றுள்­ளது. இதில் மஹிந்த ஆத­ரவு ஊட­க­வி­ய­லா­ளர்­களும் கலந்து கொண்­டுள்­ளனர். இங்கு கலந்து கொண்­ட­வர்கள், பேசப்­பட்ட விடயம் என அனைத்தும் நாம் அறிவோம். அர­சாங்­கத்­திடம் பலம் இல்லை என்றோ, எதுவும் செய்­ய­மு­டி­யாது என்றோ எண்ண வேண்டாம். அனைத்தையும் அடக்குவதற்கு செயற்படுவோம்.

தற்போது விசாரணைகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. இன்னும் இரண்டு வாரங்களில் நல்ல பெறுபேறுகளைக் காண முடியும் என பிரதமர் மேலும் தெரிவித்தார்.