Breaking News

கோத்தபாயவின் வழக்கில் இருந்து நீதியரசர் விலகினார்!

பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் தன்னை கைது செய்வதை தடுத்து உத்தரவிடுமாறு கோரி முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மீறல் வழக்கில் இருந்து நீதியரசர் பிரியந்த ஜயவர்தன விலகி கொண்டுள்ளார்.

இந்த மனு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது, தனிப்பட்ட காரணங்களின் அடிப்படையில் தான் இந்த வழக்கில் இருந்து விலகுவதாகவும் நீதியரசர் குறிப்பிட்டுள்ளார்.

பிரியந்த ஜயவர்தன, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உட்பட ராஜபக்சவினருக்கு சார்பான ஒருவர் என குற்றம் சுமத்தப்படுகிறது.மகிந்த ராஜபக்சவே, பிரியந்த ஜயவர்தனவை உயர்நீதிமன்ற நீதியரசராக நியமித்தார்.

பிரியந்த ஜயவர்தன, கோத்தபாயவின் வழக்கு தொடர்பான விசாரணைகளில் இருந்து விலகியுள்ளமையானது, தீர்ப்பு தொடர்பான விடயத்தில் பலத்த சந்தேகங்களை எழுப்பியுள்ளதாக அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.