Breaking News

தமிழ் மக்கள் பேரவை: சிங்களத் தொலைக்காட்சியில் சூடான கேள்வி பதில்

அண்மையில் யாழில் ஆரம்பித்து வைக்கப்பட்ட தமிழ்
மக்கள் பேரவை தொடர்பில் தமிழரசு கட்சிக்கு மட்டுமல்லாமல் சிங்கள தரப்பிடமும் ஒருவித பயத்தினைத் தோற்றுவித்துள்ளது.

இந்த பேரவை தொடர்பிலும் தற்போதைய அரசியல் நிலவரம் தொடர்பிலும் அதில் பங்குபற்றியிருக்கும் த.தே.ம.முன்னணி தலைவர் பொ.கஜேந்திரகுமார் அவர்களிடம் சிங்களத் தொலைக்காட்சியொன்று காரசாரமான விவாதம் ஒன்றினை நடத்தியிருந்தது அந்த விவாதத்தின் தமிழாக்கம் உங்கள் பார்வைக்காக இணைத்துள்ளோம்.

கேள்வி- முன்னைய நாட்களில் உங்களுடையை பாட்டனார் ஐம்பதுக்கு, ஐம்பது கேட்டார், ஆனால் நீங்கள் முழுப் பிராந்தியத்தையும் அல்லவா கேட்கிறீர்கள்?? 

பதில்-மற்றைய இனங்கள் போல் எங்களது இனத்திற்கும் சம உரிமை வழங்கப்பட வேண்டும் என்றே எங்களுடைய கட்சி கேட்கிறது. 

கேள்வி- நீங்கள் முதல் முதலில் எந்த ஆண்டு பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டீர்கள்? 

பதில்- 2001 இல் 

கேள்வி- 2010க்கு பின்னர் உங்களால் பாராளுமன்றத்திற்கு செல்லமுடியாமல் போய்விட்டதா? 

பதில்-பாராளுமன்றத்திற்கு செல்ல முடியவில்லை 

கேள்வி-விடுதலைப்புலிகள் இருந்தபோது பாராளுமன்றத்திற்கு செல்லமுடிந்த உங்களால் விடுதலைப்புலிகளின் மறைவிற்கு பின்னர் பாராளுமன்றம் செல்ல முடியாமல் போனதேன்? 

பதில்-இது விடுதலைப்புலிகளுடன் தொடர்புபட்ட பிரச்சனை இல்லையே! அவர்களது கோரிக்கைகளை நாங்கள் முன்வைக்கவில்லையே. நாங்கள் சமஸ்டியை அல்லவா கோருகிறோம். 

கேள்வி-சமஸ்டி கோரிக்கையில் தமிழ் மக்கள் நம்பிக்கை வைத்திருப்பார்களேயானால் நடந்துமுடிந்த தேர்தலில் உங்களுக்கும் உங்களுடைய கட்சிக்கு ஏன் அவர்கள் ஆதரவு வழங்கவில்லை? 

பதில்-ரீ.என்.ஏ யும் தாங்கள் சமஸ்டித்தீர்வையே வேண்டிநிற்பதாகக் கூறுகிறார்கள். வாக்குகளை பெற்றுக்கொள்வதற்காகவே அவர்கள் இவ்வாறு கூறினார்கள். ரீ.என்.ஏ இன்னொருதடவை மக்களை ஏமாற்ற முனைகிறது என்று நாங்கள் சொல்கிறோம். 

கேள்வி-1997 இற்கு பின்னர் ஒரு தமிழர் எதிரக்கட்சித்தலைவராகியிருக்கிறார். திரு. அமிர்தலிங்கமா அல்லது திரு. சம்பந்தனா நல்ல எதிர்க்கட்சித்தலைவர்? 

பதில்-திரு. ஜே.ஆர். ஜெயவர்தனவின் அரசாங்கத்தில் ஒரு எதிர்க்கட்சித்தலைவராக திரு. அமிர்தலிங்கம் தனது எதிர்ப்பைக் காண்பித்தார். இன்று அவ்வாறான நிலமையில்லை. திரு. சம்பந்தன் அவ்வாறல்ல, தற்போதைய அரசாங்கத்தின் ஆதரவுடன் எதிர்க்கட்சித்தலைவராகச் செயற்படுகிறார். ஆனால் திரு. சம்பந்தனும் அவரது கட்சியும் தேர்தலின்போது வழங்கிய வாக்குறுதிகள் வேறானவை, 

கேள்வி-என்ன வாக்குறுதிகள் வழங்கினார்கள்? 

பதில்-ஒன்று சமஸ்டிதீர்வினை ஏற்படுத்துவது மற்றையது சர்வதேச சுயாதீன விசாரணையை வலியுறுத்துவது. 

கேள்வி-முன்னர் நீங்கள் நம்பியிருந்த அமெரிக்கா கூட இந்த்தீர்மானத்தை கொண்டுவரவில்லையே? 

திரு. இராஜபக்ச ஆட்சியில் இல்லாத நிலையில் அமெரிக்காவிற்கு அந்தத் தேவை இல்லாமல் போய்விட்டது. 

கேள்வி-அமெரிக்காவின் மாற்றம் தமிழ்மக்களுக்கு சாதகமானதா, பாதகமானதா? 

பதில்-பாதகமானது. 

கேள்வி-தமிழ் அமைப்புக்களிடையே பிரிவு இருக்கிறதா? 

பதில்-பிரிவு இருப்பதாக நான் சொல்லமாட்டேன். ஆனால் பிரச்சனையிருக்கிறது. 

கேள்வி-ஏன் நீங்கள் திரு. விக்னேஸ்வரனுடன் இணைந்து ‘தமிழ் மக்கள் பேரவை’ என்ற புதிய அமைப்பை உருவாக்கியிருக்கிறீர்கள்? 

பதில்-உண்மையில் தமிழ் மக்களின் நல்ல அரசியல் தீர்வு வேண்டும் அதற்காக செயற்படுவதற்காக ஒரு அமைப்பு தேவைப்படுகிறது. 

கேள்வி-இது ஒரு அரசியல் கட்சியல்ல என்றால் அரசியல் வாதியான திரு. விக்னேஸ்வரனை ஏன் தலைவராக்க வேண்டும்? 

பதில்-திரு. விக்னேஸ்வரன் மக்களின் நம்பிக்கையைப்பெற்ற ஒரு மனிதர். அதைவிட நம்பிக்கைக்குரியவர் 

கேள்வி-அதைவிட நம்பிக்கைக்குரியவர் திரு. சம்பந்தன். அவரை தலைவராக்கியிருக்கலாம் அல்லவா?? 

பதில்-உண்மையில் திரு. சம்பந்தன் இந்த அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுபவர். 

கேள்வி-நீங்கள் திரு. விக்னேஸ்வரனை தலைவராக்கியிக்கிறீர்கள். அவரும் சமஸ்டித்தீர்வையா வேண்டி நிற்கிறார்? 

பதில்-ஆம்.

கேள்வி-அவரும் சமஸ்டியைத்தான் கேட்கிறார். அப்படியாயின் இது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிரான அமைப்பா? 

பதில்-எதிரான அமைப்பு அல்ல. ஏனெனில் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கிற திரு. சுரேஸ் பிரேமச்சந்திரன், புளொட் அமைப்பின் தலைவர் திரு. சித்தார்த்தன் ஆகியோரும் இதிலிருக்கிறார்கள். தேர்தலின்போது உறுதியளித்த விடயங்களை நிறைவேற்றப்போகிறார்கள் எனில் அவர்களுக்கு பயப்படுவதற்கு ஒன்றுமில்லை.

கேள்வி-தேர்தலின்போது உறுதியளித்த விடயங்களை நிறைவேற்றப்போகிறார்கள் எனில் அவர்களுக்கு பயப்படுவதற்கு ஒன்றுமில்லை. அப்படியென்றால் தமிழ் கூட்டமைப்பை பயப்பட வைப்பதற்காகவா இவ்வாறான அமைப்பை ஏற்படுத்தியுள்ளீர்கள்? 

பதில்-அப்படியில்லை மக்களின் அரசியற் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவேண்டும். அதற்காக்கத்தான் இந்த அமைப்பு. 

கேள்வி-இந்தக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் அடுத்த தேர்தலில் இந்த அமைப்பு போட்டியிடுமா? 

பதில்-நாங்கள் முன்னோக்கிச் செல்வோம். இறுதியில் என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.