வவுனியாவில் எதிர்வரும் புதன்கிழமை பூரணஹர்த்தாலுக்கு அழைப்பு
வவுனியாவில் பாடசாலை மாணவியின் கொலைக்கு நீதிகோரியும் குற்றவாளிக்கு உரிய தண்டணை வழங்குமாறு கோரியும் எதிர்வரும் புதன்கிழமை பூரண ஹர்த்தால் அனுஷ்டிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக வன்முறைக்கு எதிரான மக்கள் அமைப்பு பேரணியை ஏற்பாடுசெய்துள்ள அதேவேளை, அரசியல்கட்சிகள், மகளிர் அமைப்புக்கள், கிராம அபிவிருத்தி சங்கங்கள், மனித உரிமை அமைப்புக்கள், ஆகியன ஒன்றிணையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பேரணியின்போது குற்றவாளியை கைதுசெய்யுமாறு கோரியும், மற்றும் உடனடியாக தண்டனை வழங்ககோரியும் அரசாங்க அதிபர் ஊடாக ஜனாதிபதி மற்றும் பொலிஸ்மா அதிபருக்கு மகஜர் ஒன்று கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பேரணியை தொடர்ந்து பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை கொலை செய்யப்பட்ட மாணவிக்காக அனைத்து பாடசாலைகளிலும் கவனயீர்ப்பு நடவடிக்கையை மேற்கொள்ளுமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.