நாளை இலங்கை வருகிறார் நியூசிலாந்து பிரதமர்
நியூசிலாந்து பிரதமர் ஜோன் பிலிப் கீ, ஐந்து நாள் அதிகாரபூர்வ பயணமாக நாளை இலங்கைக்கு வரவுள்ளார். நாளை தொடக்கம், வரும் 27ஆம் திகதி வரை அவர் இலங்கையில் தங்கியிருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பயணத்தின் போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட தலைவர்களை நியூசிலாந்து பிரதமர், ஜோன் கீ, சந்தித்துப் பேச்சுக்களை நடத்தவுள்ளார்.
அத்துடன் நியூசிலாந்து பால் உற்பத்தி நிறுவனம் ஒன்றின் பண்ணை மற்றும் பயிற்சி நிலையத்தையும், நியூசிலாந்து பிரதமர் திறந்து வைக்கவுள்ளார்.கண்டி தலதா மாளிகையிலும் இவர் வழிபாடுகளை மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.








