Breaking News

ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் கொழும்பு வந்தார்

ஆசிய அபிவிருத்தி வங்கியின் பணிப்பாளர்கள் சபையின் தலைவரான, தகேஹிகோ நகோ இரண்டு நாள் அதிகாரபூர்வ பயணமாக நேற்றுமாலை சிறிலங்கா வந்தார். அவர் நேற்று நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுடன் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

அதேவேளை, ஆசிய அபிவிருத்தி வங்கியின் பணிப்பாளர்கள் சபையின் தலைவரான, தகேஹிகோ நகோ இன்று அதிபர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஆகியோரை சந்தித்துப் பேசத் திட்டமிட்டுள்ளார்.

இவர் சிறிலங்காவில் தங்கியிருக்கும் போது, நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுடன், சில உடன்பாடுகளில் கையெழுத்திடுவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை சமாளிப்பதற்கு, ஆசிய அபிவிருத்தி வங்கி உள்ளிட்ட அனைத்துலக நிதி நிறுவனங்களின் உதவியை சிறிலங்கா அரசாங்கம் கோரியிருப்பது குறிப்பிடத்தக்கது.