Breaking News

இராணுவத்தை இலக்கு வைத்ததாக உள்ள விசாரணைகள் அமையாது - என்கிறார் ருவான்

தமிழ் மக்­களின் உரி­மை­களை பெற்­றுக்­கொ­டுப்­பதும் வடக்கில் ஜன­நா­யக செயற்­பா­டு­களை பலப்­ப­டுத்­து­வதும் பிரி­வி­னை­வாத செயற்­பா­டுகள் அல்ல. முன்­னைய அர­சாங்கம் செய்­யா­ததை நாம் செய்­கின்றோம் என்­ப­தற்­காக தேசிய பாது­காப்பில் சந்­தேகம் கொள்ளத் தேவையும் இல்லை என பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்சர் ருவான் விஜ­ய­வர்­த்தன தெரி­வித்தார்.

தேசிய பாது­காப்பை சீர்­கு­லைக்கும் எந்த நட­வ­டிக்­கை­க­ளுக்கும் நாம் இட­ம­ளிக்கப் போவ­தில்லை. அதேபோல் இப்­போ­தி­ருக்கும் நிலை­மையில் நாட்டின் தேசிய பாது­காப்பில் எந்த அச்­சமும் கொள்­ளத்­தே­வை­யில்லை எனவும் அவர் குறிப்­பிட்டார்.


எந்த சந்­தர்ப்­பத்­திலும் சர்­வ­தேச நீதி­மன்­றத் தின் மூல­மாக எமது இரா­ணு­வத்தை விசா­ரிக்க அனு­ம­திப்­ப­தில்லை என்ற நிலைப்­பாட்டில் ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் உள்­ளனர். எனினும் உள்­ளக பொறி­மு­றைகள் சரி­யாக நடை­பெறும். இதன் போதும் இரா­ணுவம் செய்­த­தாக கூறப்­படும் குற்­றச்­சாட்­டுகள் தொடர்பில் விசா­ர­ணைகள் இடம்­பெற்­றாலும் அது எந்த சந்­தர்ப்­பத்­திலும் இரா­ணு­வத்தை இலக்­கு­வைத்த பொறி­மு­றை­யாக அமை­யாது எனவும் அவர் கூறினார்.

தேசிய பாது­காப்பில் அச்­ச­நி­லைமை ஏற்­பட்­டுள்­ள­தாக மஹிந்த ஆத­ரவு அணி­யினர் தெரி­வித்து வரும் நிலையில். அது குறித்து கருத்து தெரி­விக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறு­கையில், ஆட்சி மாற்­றத்தின் பின்னர் நாட்டில் பிரி­வி­னை­வாத செயற்­பா­டுகள் பல­ம­டைந்து செயற்­ப­டு­வ­தா­கவும் எமது இரா­ணு­வத்தை காட்­டிக்­கொ­டுக்கும் செயற்­பா­டுகள் தீவி­ர­மாக முன்­னெ­டுக்­கப்­ப­டு­வ­தா­கவும் ஒரு தரப்­பினர் தொடர்ச்­சி­யாக கூறி வரு­கின்­றனர். கடந்த காலத்தில் நாட்டில் இன­வா­தத்தை பரப்பி சிறு­பான்மை மக்­களை பிரி­வி­னை­வா­திகள் என்ற கோணத்தில் சித்­தி­ரித்­தனர். முஸ்லிம் சமூ­கத்­தி­ன­ருக்கு எதி­ரான பல அவ­தூ­று­களை முன்­வைத்­தனர். அந்த இன­வாத குழுக்­களை கடந்த ஜனா­தி­பதித் தேர்­தலின் போதும் பொதுத் தேர்­தலின் போதும் மக்கள் நிரா­க­ரித்து விட்­டனர்.

எனினும் இன­வா­தத்தில் ஊறிய மஹிந்த தரப்­பி­ன­ருக்கு ஜன­நா­ய­கத்தின் பாதையில் பய­ணிக்க தெரி­யா­துள்­ளது. நாட்டில் ஜன­நா­ய­கத்தை கட்­டி­யெ­ழுப்பும் அணியில் இவர்­களால் பங்­கு­கொள்ள முடி­யா­துள்­ளது. யுத்தம் முடி­வுக்கு வந்­ததில் இருந்து வடக்கு மக்­க­ளுக்கு எந்த சலு­கை­க­ளையும் முன்­னைய அர­சாங்­கத்­தினால் முன்­னெ­டுக்க முடி­ய­வில்லை. ஆனால் இன்று வடக்கில் பொது­மக்­க­ளுக்கு உரி­மை­க­ளையும், அவர்­க­ளுக்­கான உடை­மை­க­ளையும் நாம் பெற்­றுக்­கொ­டுத்­துள்ளோம். அதை இவர்­களால் தாங்­கிக்­கொள்ள முடி­ய­வில்லை. ஆகவே தான் இன்றும் இவர்கள் இன­வாதக் கருத்­து­களை பரப்பி நாட்டில் குழப்­பங்­களை ஏற்­ப­டுத்தும் நட­வடிக்­கை­களை மேற்­கொண்டு வரு­கின்­றனர்.

எவ்­வாறு இருப்­பினும் நாட்டில் எந்த சந்­தர்ப்­பத்­திலும் குழப்­பங்­களை ஏற்­ப­டுத்த இந்த அர­சாங்கம் இட­ம­ளிக்­காது. அதேபோல் தேசிய பாது­காப்பை சீர்­கு­லைக்கும் எந்த நட­வ­டிக்­கை­க­ளுக்கும் நாம் இட­ம­ளிக்கப் போவ­தில்லை. எனினும் இப்­போ­தி­ருக்கும் நிலை­மையில் நாட்டின் தேசிய பாது­காப்பில் எந்த அச்­சமும் கொள்­ளத்­தே­வை­யில்லை. புலம்­பெயர் அமைப்­பு­களின் ஆதிக்­கமோ அல்­லது சர்­வ­தேச தரப்பின் தலை­யீ­டு­களோ இன்று எமக்கு இல்லை. மாறாக அனை­வ­ரதும் ஒத்­து­ழைப்­புடன் நாம் ஆட்­சியை முன்­னெ­டுத்து செல்­கின்றோம்.

அதேபோல் இறுதி யுத்­தத்தில் இடம்­பெற்­ற­தாக கூறப்­படும் போர்க்­குற்­றங்கள் தொடர்பில் சர்­வ­தேச விசா­ர­ணை­களின் மூல­மாக எமது இரா­ணு­வத்தை தண்­டிக்­கப்­போ­வ­தாக கூறு­கின்­றனர். ஆனால் எந்த சந்­தர்­ப்பத்­திலும் சர்­வ­தேச நீதி­மன்­றத்தின் மூல­மாக எமது இரா­ணு­வத்தை விசா­ரிக்க அனு­ம­திப்­ப­தில்லை என்ற நிலைப்­பாட்டில் ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் உள்­ளனர். எனினும் உள்­ளக பொறி­மு­றைகள் சரி­யாக நடை­பெறும். இதன் போதும் இரா­ணுவம் செய்­த­தாக கூறப்­படும் குற்­றச்­சாட்­டுகள் தொடர்பில் விசா­ர­ணைகள் இடம்­பெற்­றாலும் அது எந்த சந்­தர்ப்­பத்­திலும் இரா­ணு­வத்தை இலக்­கு­வைத்த பொறி­மு­றை­யாக அமை­யாது.

இறுதி யுத்­தத்தில் பொது­மக்கள் பாதிக்­கப்­பட்­டனர். பொது­மக்கள் காணாமல் போன­தாகக் கூறப்­ப­டு­கின்­றது. அதேபோல் பொது­மக்கள் இரா­ணுவம் வசம் சர­ண­டைந்­த­தா­கவும் குறிப்­பி­டப்­ப­டு­கின்­றது. அவ்­ வா­றான பொது­மக்­களின் குற்­றச்­சாட்டுகள் தொடர்பில் பல கோணங்­களில் விசா­ர­ணை கள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன. காணாமல் போனோரை கண்­ட­றியும் ஆணைக்­கு­ழுவின் செயற்­பா­டு­களும் தொடர்ச்­சியாக முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. அவ்­வாரு இருக்கையில் உண்மைகளை கண்டறியும் நடவடிக்கைகள் பலமாக முன்னெடுக்கப்படும்.

எவ்வாறு இருப்பினும் ஜனநாயகத்தையும் அதனுடன் கூடிய தேசிய பாதுகாப்பையும் முன்னெடுக்கும் எமது செயற்பாடுகளில் இனவாதிகளுக்கோ அல்லது அவர்களின் கருத்துகளுக்கோ முன்னுரிமை வழங்கப்பட மாட்டாது. நாட்டில் இன்று பிரிவினைக்கு இடம் இல்லை. அதேபோல் தேசிய பாதுகாப்பில் எந்த சிக்கலும் இல்லை. தொடர்ந்தும் தேசிய பாதுகாப்பிற்கு எந்த வித சிக்கலும் இல் லாது நடவடிக்கை கள் முன்னெடுக்கப்படும் என்றார்.