Breaking News

ஐ.நா.மனித உரிமைப் பேரவையின் 31ஆவது கூட்டத் தொடர் இன்று

ஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் பேர­வையின் 31 ஆவது கூட்டத் தொடர் இன்று திங்­கட்­கி­ழமை ஜெனி­வாவில் ஆரம்­ப­மா­க­வுள்ள நிலையில் முத­லா­வது அமர்­வின்­போது உரை­யாற்­ற­வுள்ள ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் செய்ட் அல் ஹுசேன் இலங்­கைக்கு மேற்­கொண்ட விஜயம் தொடர்பில் பேர­வைக்கு விளக்கம் அளிக்­க­வுள்ளார்.

செய்ட் அல் ஹுசேன் தனது உரையில் இலங்கை மனித உரிமை விவ­காரம் தொடர்­பான தனது குறு­கிய விளக்­கத்தை அளிப்பார் எனவும் எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

மார்ச் மாதம் 24 ஆம் திகதி வரை நடை­பெ­ற­வுள்ள ஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் பேர­வையின் 31 ஆவது கூட்டத் தொடரில் இலங்கை தொடர்­பாக விவாதம் நடத்­து­வ­தற்கு எந்­த­வொரு தினமும் இது­வரை நிகழ்ச்சி நிரல் அட்­ட­வ­ணையில் ஒதுக்­கப்­ப­ட­வில்லை.

எனினும் நாடு­களின் பிர­தி­நி­திகள் உரை­யாற்­றும்­போது அவ்­வப்­போது இலங்கை குறித்து கேள்­விகள் எழுப்­பப்­படும் என கூறப்­ப­டு­கின்­றது. அத்­துடன் மனித உரிமை கண்­கா­ணிப்­பகம், சர்­வ­தேச மன்­னிப்புச் சபை உள்­ளிட்ட சர்­வ­தேச நிறு­வ­னங்கள் இலங்கை தொடர்பில் தமது கருத்­துக்­களை முன்­வைக்­க­வுள்­ளன. ஏற்­க­னவே இலங்­கையில் ஐக்­கிய நாடு­களின் மனித உரிமை அலு­வ­லகம் ஒன்றை நிறு­வ­வேண்டும் என சர்­வ­தேச மன்­னிப்புச் சபை தெரி­வித்­துள்­ளது.

இலங்­கையின் சார்பில் ஜெனி­வாவில் உள்ள இலங்­கைக்­கான வதி­விட பிர­தி­நிதி ரவி­நாத ஆரி­ய­சிங்க தலை­மை­யி­லான குழு­வினர் 31 ஆவது கூட்டத் தொடரில் பங்­கேற்­க­வுள்­ளனர்.

உலக நாடு­களின் மனித உரிமை நிலை­மைகள், முன்­னெ­டுக்­கப்­பட வேண்­டிய வேலைத்­திட்­டங்கள், ஏற்­க­னவே நிறை­வேற்­றப்­பட்ட பிரே­ர­ணைகள் உள்­ளிட்ட பல்­வேறு நிலை­மைகள் குறித்து இம் முறை 31 ஆவது கூட்டத் தொடரில் 47 உறுப்பு நாடு­க­ளினால் விரி­வாக ஆரா­யப்­ப­ட­வுள்ள­ன.

மேலும் எதிர்­வரும் 29 ஆம் திகதி திங்­கட்­கி­ழமை இடம்­பெ­ற­வுள்ள முத­லா­வது அமர்வில் மனித உரிமைப் பேர­வையின் தலைவர் சொய் கியோம்லிங் ஐ.நா. பொதுச்சபை தலைவர் மற்றும் ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் செய்ட் அல் ஹுசேன் ஆகியோர் உரை­யாற்­ற­வுள்­ளனர்.

அதன் பின்னர் பல்­வேறு உறுப்பு நாடுகள் உரை­யாற்­ற­வுள்­ள­துடன் ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் பிர­தி­நிதியும் முதலாம் நாள் அமர் வில் உரை­யாற்­ற­வுள்ளார். இதன்­போது இலங்கை தொடர்பில் பிரஸ்­தா­பிக்­கப்­படும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

விசே­ட­மாக செவ்வாய் மற்றும் புதன் கிழமை தினங்­களில் ரஷ்யா,சுவீடன், நோர்வே, ஜப்பான், இத்­தாலி, அவுஸ்தி­ரே­ லியா ஆகிய நாடு­களும் பொது­ந­ல­வாய நாடுகளின் பிர­தி­நி­தியும் உரை­யாற்­ற­வுள்­ளனர்.

இம்­மா­தத்தின் ஆரம்ப பகு­தியில் இலங்­கைக்கு விஜயம் மேற்­கொண்ட ஐக்­கிய நாடுகள் மனித உரிமை ஆணை­யாளர் செய்ட் அல் ஹுசேன் இலங்­கையின் மனித உரிமை நிலை­மைகள் குறித்து மதிப்பீடு செய்திருந்தார். தனது விஜயத்தை முடித்துக்கொண்டு கருத்து வெளியிட்டிருந்த ஹுசைன் வெளிநாட்டு நீதிபதிகள் தொடர்பில் தீர்மானம் எடுப்பது இலங்கையின் இறைமை தொடர்பான முடிவாகும் என்று குறிப்பிட்டிருந்தார்.