Breaking News

யோசித கைது விவகாரம்! தேசிய பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் ஆராய்வு

யோசித ராஜபக்ச கைது செய்யப்பட்டது தொடர்பாக தேசிய பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில், ஆராயப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

யோசித ராஜபக்சவின் கைது பற்றிய தகவல்களை, தேசிய பாதுகாப்புச் சபைகூட்டத்துக்கு தலைமை தாங்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் பாதுகாப்பு அதிகாரிகளிடம் கோரியுள்ளனர்.

அதற்கு, ஒரு ஆண்டாக நடத்தப்பட்ட விசாரணைகளுக்குப் பின்னரே, யோசித ராஜபக்ச கைது செய்யப்பட்டதாகவும், சிஎஸ்என் தொலைக்காட்சியின் தலைவராக அவர் செயற்பட்டதை உறுதிப்படுத்தும், 12,000 மின்னஞ்சல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், உயர்மட்டப் பாதுகாப்பு அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.

அப்போது, அரசியல்வாதிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரைக் கைது செய்வதற்கு முன்னர், அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளின் உண்மைத்தன்மையை சரியாக உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ஜனாதிபதியும், பிரதமரும் வலியுறுத்தியுள்ளனர்