கலப்புமுறை நீதிமன்றம் அவசியம் - அரசாங்கத்திடம் வலிறுத்தினார் அல் ஹுசைன்
போர்க்குற்ற விசாரணை நடத்தப்படும் போது சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கிய கலப்புமுறை நீதிமன்றம் அவசியம் என கொழும்புக்குச் சென்றுள்ள ஜெனீவா மனித உரிமைச் சபையின் ஆணையாளர் செய்ட் ராட் அல் ஹுசைன் அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளார். கூடிய விரைவில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கடைக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஜனாதிபதி மைத்திபால சிறிசேனவுக்கு வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீரவின் மூலமாக ஆணையாளர் செய்ட் ராட் அல் ஹுசைன் தகவல் ஒன்றை வழங்கினார் என்றும் அந்த தகவலில் கலப்புமுறை நீதிமன்றம் குறித்து வற்புறுத்தப்பட்டுள்ளது.
விசாரணையின் போது ஜெனீவா மனித உரிமைச்சபையின் ஆலோசணை பெறப்பட வேண்டும் என்றும் சர்வதேசதரத்திற்கு விசாரணைகள் அமைய வேண்டும் எனவும் இலங்கைப்படை உயரதிகாரிகள் அல்லது பாதுகாப்பு உயரதிகாரிகள் எவரும் விசாரணையில் ஈடுபடவோ அல்லது தலையிடவோ முடியாது என்றும் ஆணையாளர் செய்ட் ராட் அல் ஹசைய்ன் வலியுறுத்தியதாக குறிப்பிடப்படுகிறது.