Breaking News

அச்சுறுத்தல்களை கண்டு நான் அஞ்சப்போவதில்லை!

எனது அர­சியல் வாழ்க்­கையில் எத்­த­னையோ அச்­சு­றுத்­தல்­களை சந்­தித்துள்ளேன். எனவே எனக்­கெ­தி­ரான மரண அச்­சு­றுத்தல் தொடர்பில் நான் அஞ்சப் போவ­தில்­லை­யென சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரிய நேற்று சபையில் தெரி­வித்தார்.

ஜே.வி.பி. தலைவரும் எதிர்க்­கட்­சியின் பிர­தம கொற­டாவும் எம்.பி.யு­மான அநுர திஸா­நா­யக்க நேற்று வியா­ழக்­கி­ழமை பாரா­ளு­மன்­றத்தில் ஒழுங்குப் பிரச்­சி­னை­யொன்றை எழுப்பினார்.இதில் சபா­நா­ய­க­ருக்கு (உங்­க­ளுக்கு) தொலை பேசி மூலம் மரண அச்­சு­றுத்தல் விடுக்­கப்­பட்­டதாக நீங்கள் நேற்று (புதன்­கி­ழமை) சபையில் வெளிப்­ப­டுத்­திய விடயம் இன்­றைய ஊட­கங்­களில் முதன்மைச் செய்­தி­யாக வெளி­வந்­துள்­ளது.

எனவே இவ்­வி­டயம் தொடர்பில் இப்­பா­ரா­ளு­மன்றம் அதிக கவ­னத்தைச் செலுத்த வேண்டும்.இச் சபையில் பலர் பல்­வே­று­வி­த­மான கருத்­துக்­களை வெளி­யி­டலாம். விவா­தங்­களை முன்­வைக்­கலாம்.இவை­ய­னைத்­தையும் செவி­ம­டுத்து அவை தொடர்பில் சபா­நா­ய­க­ரான நீங்­களே இறுதித் தீர்வை வழங்­கு­வீர்கள்.

அது ஏற்­றுக்­கொள்­ளப்­பட வேண்டும்.இது தான் பாரா­ளு­மன்ற சம்­பி­ர­தா­ய­மாகும். இதனை எதிர்த்து உங்­க­ளுக்கு மரண அச்­சு­றுத்தல் விடுத்­தி­ருப்­பது பாரா­ளு­மன்ற சம்­பி­ர­தா­யத்தை மீறும் செய­லாகும்.எனவே உங்­க­ளுக்கு விடுக்­கப்­பட்ட மரண அச்­சு­றுத்தல் தொடர்­பாக அதனை விடுத்­தவர் யார்? என்பன தொடர்­பாக நீங்கள் முன்­னெ­டுத்­துள்ள நட­வ­டிக்­கைகள் என்ன என அநுர திஸா­நா­யக்க எம்.பி.கேள்வி எழுப்­பினார்.

இதற்குப் பதி­ல­ளித்த போதே சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரிய மேற்­கண்­ட­வாறு பதி­ல­ளித்தார்.சபா­நா­யகர் தனது பதிலில், அநுர திஸா­நா­யக்க எம்பி.இக்­கேள்­வியை கேட்­ட­தை­யிட்டு நன்­றியை தெரி­வித்­துக்­கொள்­கிறேன்.இது தொடர்பில் எனது பாது­காப்பு தரப்­பி­ன­ருக்கு அறி­வித்­துள்ளேன்.

நாளை பொலிஸ்மா அதி­பரைச் சந்­தித்து பேச்­சுக்­களை நடத்தி முடி­வெ­டுப்பேன்.இது தொடர்­பி­லான முடிவை நாளை (இன்று) சபைக்கு அறி­விப்பேன் என்றார். இதன் போது கருத்து தெரி­வித்த பந்­துல குணவர்த்தன எம்.பி.எம்.பிக்களின் பாதுகாவலராக இருப்பவர் நீங்கள். எனவே உங்களுக்கும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமை பாரதூரமான விடயமாகும். எனவே இதனை தேடிப்பார்க்க வேண்டும் என்றார்.