Breaking News

அஸ்கிரிய பீடாதிபதி நேற்றிரவு காலமானார்

இலங்கையின் முக்கிய பௌத்த பீடங்களில் ஒன்றான அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரர், வண.கலகம அட்டஸ்சி தேரர் (வயது94) நேற்றிரவு கண்டியில் காலமானார்.

நேற்று மாலை மயங்கி வீழ்ந்த அஸ்கிரிய மகாநாயக்கர் உடனடியாக கண்டி பொது மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்றுமுன்னரவில் காலமானார்.

அஸ்கிரிய பீட மகாநாயக்கராக இருந்த வண.உடுகம சிறி புத்தரகித்த தேரர் மறைந்ததையடுத்து, அஸ்கிரிய பீடத்தின் 21ஆவது மகாநாயக்கராக கடந்த ஆண்டு மே மாதம் நியமிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.