சம்பூரில் இருந்து இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்தும் நடவடிக்கை
சம்பூரில் இருந்து இடம்பெயர்ந்த எஞ்சிய மக்களை மிளக்குடியேற்றும் பணிகளை ஏப்ரல் 1ஆம் நாள் ஆரம்பிக்குமாறு மூதூர் பிரதேச செயலருக்கு உத்தரவிட்டுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுனர் ஒஸ்ரின் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.
இந்த மாதம் 31ஆம் நாளுக்கு முன்னதாக, சம்பூரில் உள்ள விதுர கடற்படைத் தளம் இடம்மாற்றப்பட்ட பின்னர், மீளக்குடியமர்த்தும் நடவடிக்கைகளை நிறைவு செய்ய முடியும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
சம்பூர் மத்திய மகா வித்தியாலய சுற்றாடல் எற்கனவே சிறிலங்கா கடற்படையினரால் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், பாடசாலையை மீண்டும் திறப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.








