Breaking News

பசிலின் கட்சி உறுப்புரிமை இரத்து

முன்னாள் பொருளாதார அமைச்சரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளருமான பெசில் ராஜபக்சவின் கட்சி உறுப்புரிமை இரத்துச்செய்யப்பட்டுள்ளது.

இந்தத் தகவலை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் இளைஞர் பிரிவு தேசிய அமைப்பாளரான ரவி கிருசாந்த சிங்கள ஊடகம் ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

2005ஆம் ஆண்டு அமெரிக்காவிலிருந்து ஸ்ரீலங்கா திரும்பிய பெசில் ராஜபக்‌ச, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌சவின் ஆதரவினால் கட்சியின் தேசிய அமைப்பாளராகவும், அமைச்சராகவும் பதவியேற்றார்.

எனினும், பெசில் ராஜபக்‌ச எந்த சந்தர்ப்பத்திலும் 10 ரூபா பணத்தை செலுத்தி சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமையைப் பெறவில்லை. இதனால் பெசில் ராஜபக்‌ச தொடர்ந்தும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினரல்ல.

சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் வருடாந்தம் தமது அங்கத்துவத்தை புதுப்பிக்க வேண்டும். எனினும் பெசில் ராஜபக்‌ச அவ்வாறு கட்சி உறுப்புரிமையை புதுப்பித்துக் கொள்ளவில்லை.

இவ்வாறான நபர் ஒருவர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை இரண்டாக பிளவடையச் செய்து புதிய கட்சி அமைப்பது குறித்து பேசுவது ஆச்சரியப்படக்கூடிய வியடமன்று - என்றார்.