Breaking News

தமிழின அழிப்பிற்கு நீதி கோரி ஜெனீவா ஐ.நா முன்றலில் தமிழர்கள் பேரணி

தமிழின அழிப்பிற்கு நீதிகோரி ஜெனீவாவிலுள்ள ஐ.நா முன்றலை நோக்கிய கவனயீர்ப்புப் பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. 

இதில் ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலிருந்து வந்துள்ள ஏராளமான புலம்பெயர் தமிழர்கள் கலந்துகொண்டுள்ளதாக கண்டனப் பேரணி நடைபெறும் இடத்திலிருக்கும் எமது சுவிஸ் செய்தியாளர் கண்ணன் தெரிவிக்கின்றார். 

ஜெனீவா தொடரூந்து நிலையத்திற்கு அருகிலுள்ள பூங்காவிற்கு முன்னால் ஆரம்பமாகியுள்ள இந்த கண்டனப் பேரணி ஐ.நா முன்றலை நோக்கி செல்கின்றது. 

இதில் கலந்துகொண்டுள்ள மக்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பாரிய உருவப் படத்தையும், தமிழீழ விடுதலைப் புலிகளின் கொடிகளையும் தாங்கிய வண்ணம், தமிழின அழிப்பை பறைசாற்றும் புகைப்படங்கள் தாங்கிய பதாதைகளையும் தாங்கிய வண்ணம் உள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.