Breaking News

எனது அரசியல் பயணத்தை யாராலும் நிறுத்த முடியாது – மஹிந்த

யாராலும் தமது அரசியல் பயணத்தை தடுத்து நிறுத்திவிட முடியாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

மக்களின் தேவைகளுக்கு மக்களின் கோரிக்கைகளுக்கு அமையவே தாம் அரசியலில் ஈடுபடுவதாகத் தெரிவித்துள்ளார்.நாட்டில் தற்போது நிலவி வரும் சூழ்நிலை காரணமாக தாம் செல்லும் இடமெல்லாம் மக்கள் தம்மை மிகுந்த ஆர்வத்துடன் வரவேற்று வருவதாகத் தெரிவித்துள்ளார்.

தம்மைச் சுற்றி இணைந்து கொள்ளும் தரப்பினர்களின் எண்ணிக்கை மேலும் மேலும் அதிகரித்துச் செல்வதாகத் தெரிவித்துள்ளார்.எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை தாம் கைவிடப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமது அரசியல் வாழ்க்கை பற்றி பல்வேறு தரப்பினர் வெவ்வேறு பிரச்சாரம் செய்து வருகின்ற போதிலும் அவற்றைக் கண்டு தாம் அஞ்சப் போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.