Breaking News

புலிகளிடம் கைப்பற்றிய தங்கத்தின் ஒரு பகுதி இராணுவத்திடம் – ரணில் தெரிவிப்பு

போரின் முடிவில் விடுதலைப் புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட தங்க நகைகளின் ஒரு பகுதி இன்னமும்  இராணுவத்திடம் இருப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளின் வங்கியில் வைக்கப்பட்டிருந்த பொதுமக்களின் நகைகளை அடையாளம் கண்டு அவற்றின் உண்மையான உரிமையாளர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

புலிகளிடம் இருந்து மீட்கப்பட்ட நகைகள் இலங்கை மத்திய வங்கியிடமும் இராணுவத்திடமும் உள்ளன.ஏற்கனவே உரிமையாளர்களிடம் தங்க நகைகள் ஒப்படைக்கப்பட்டன. இன்னமும்  இராணுவத்திடம் ஒரு தொகை நகைகள் உள்ளன.

இதுகுறித்த தகவல்களை வெளியிட்டு, உண்மையான உரிமையாளர்களை அடையாளம் காண வடக்கிலுள்ள அரசியல் கட்சிகள் உதவ வேண்டும்” என்றம் அவர் கோரியுள்ளார்.